"என்னோட கடைசி தொடர்".. ஓய்வு முடிவை எடுத்த பெடரர்.. மனதை உருக வைக்கும் அறிக்கை.. வேதனையில் ரசிகர்கள்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டென்னிஸ் ஜாம்பவான் என அறியப்படும் ரோஜர் பெடரர் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ள விஷயம், இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர். கடந்த 24 ஆண்டுகளாக டென்னிஸ் விளையாட்டில் தனக்கென தனி சாம்ராஜ்யத்தை நடத்தி வந்த பெடரர், 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற முதல் வீரர் என்ற பெருமையை பெற்றவராவார்.

2003ம் ஆண்டு விம்பிள்டனில் சாம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம் பெடரர் தனது முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை பெற்றார்.

இதன் பிறகு, அடுத்தடுத்து பல சர்வதேச போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்து நம்பர் 1 வீரராகவும் வலம் வந்தார். இவரது ஆட்டத்துக்கென உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் கூட்டமும் உள்ளது. டென்னிஸ் ஆடும் பலருக்கும் ஒரு இன்ஸபிரேஷன் ஆகவும் பெடரர் இருந்து வருகிறார். இந்நிலையில், தற்போது தனது டென்னிஸ் பயணத்தில் இருந்து ஓய்வு முடிவை அறிவித்துள்ளார் பெடரர்.

24 ஆண்டுகள் டென்னிஸ் பயணத்திற்கு பின்னர், தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ள பெடரர், இது தொடர்பாக ட்விட்டரில் அறிக்கை ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

"கடந்த 3 ஆண்டுகள் எனக்கு எத்தனை காயங்கள், அறுவை சிகிச்சைகள் நடந்தது என்பது உங்களுக்கு தெரியும். அதையும் தாண்டி, டென்னிஸ் களத்திற்கு திரும்ப கடுமையாக முயற்சித்தேன். ஆனால், என்னுடைய உடல் ஒத்துழைக்கவில்லை. 24 ஆண்டுகளில் 1500 க்கும் மேற்பட்ட போட்டிகளில் ஆடி உள்ளேன்.


இந்த 24 வருடங்களும் 24 மணி நேரத்தில் கடந்து போனதாக சில நேரம் உணர்வேன். எனது வாழ்க்கையில் அனைத்தையும் டென்னிஸ் கொடுத்தது. நல்ல நண்பர்கள், ரசிகர்கள் என அனைத்தையும் கொடுத்தது டென்னிஸ் தான். அடுத்த ஆண்டு ஆரம்பமாகும் லெவர் கோப்பை தான் எனது கடைசி ATP தொடர்" என பெடரர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இது தவிர தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு நன்றி சொன்ன பெடரர், தனது பயிற்சியாளர்கள், சக போட்டியாளர்கள், குடும்பத்தினர் என அனைவருக்கும் தனது நன்றிகளை குறிப்பிட்டுள்ளார். 41 வயதாகும் பெடரர் ஓய்வு முடிவை அறிவித்துள்ளது, அவரது ரசிகர்கள் பலரையும் உருக வைத்துள்ளது.

 

மேலும், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி உள்ளிட்ட பல பிரபலங்களும் பெடரர் முடிவு குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ROGER FEDERER, TENNIS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்