ஐபிஎல் ஏலத்துக்காக CSK போட்டு வெச்ச பிளான்?.. ராபின் உத்தப்பா உடைத்த சீக்ரெட்?.. இவங்க தான் டார்கெட்டா?"

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம், நாளை (22.12.2022) கேரள மாநிலம் கொச்சியில் வைத்து நடைபெற உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | இந்தா வந்துருச்சுல்ல.. ‘சாண்டா அண்ட் தி மெர்மெய்ட்’.. VGP மெரைன் கிங்டமில் வேற லெவல் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்..!

முன்னதாக, ஐபிஎல் தொடரில் உள்ள 10 அணிகளும் தங்கள் அணியில் தக்க வைத்துக் கொண்ட வீரர்கள் பட்டியலையும், விடுவித்த வீரர்கள் பட்டியலையும் முன்னரே வெளியிட்டிருந்தது.

இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐபிஎல் தொடருக்கு முன்பாக ராபின் உத்தப்பா, பிராவோ, கிறிஸ் ஜோர்டன் உள்ளிட்ட எட்டு வீரர்களை அணியில் இருந்து விடுவித்திருந்தது.

மறுபக்கம் ருத்துராஜ், ஜடேஜா, மொயீன் அலி உள்ளிட்ட ஏராளமான வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி, ஐபிஎல் ஏலத்தில் எந்த மாதிரியான வீரர்களை தேர்வு செய்யும் என்பதை அறியவும் அந்த அணியின் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். அதே போல, சிஎஸ்கே எந்தெந்த வீரர்கள் எடுக்க வேண்டும் என்பது குறித்து தங்களின் விருப்பமான வீரர்களின் பெயர்களையும் அவர்கள் பட்டியலிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை அணிக்காக ஆடிய ராபின் உத்தப்பா, சிஎஸ்கே அணி எந்தெந்த வீரர்களை தேர்வு செய்ய முயற்சிக்கும் என்பது பற்றி தெரிவித்துள்ள கருத்து தற்போது அதிக வைரல் ஆகி வருகிறது.

ஐபிஎல் மினி ஏலத்திற்கு சுமார் 20.45 கோடி ரூபாயுடன் சென்னை அணி கோதாவில் இறங்க உள்ளது. நான்கு முறை ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ஒன்பதாவது இடம்பிடித்து வெளியேறி இருந்தது.

ஆனால் சிறந்த வீரர்களை ஐபிஎல் மினி ஏலத்தில் தேர்வு செய்து நிச்சயம் சிஎஸ்கே அணி 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கோப்பையை கைப்பற்றும் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். அப்படி ஒரு சூழலில் சிஎஸ்கே முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா சிஎஸ்கே அணி தேர்வு செய்யும் வீரர் குறித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இது பற்றி பேசும் அவர், "பிராவோ இடத்தை நிரப்பும் ஒரு ஆல் ரவுண்டரை சிஎஸ்கே அணி தேர்வு செய்ய வேண்டும். அதே போல ஒரு சிறந்த இந்திய மிடில் ஆர்டர் இந்திய பேட்ஸ்மேனையும் பேக்கப்பிற்காக அவர்கள் எடுக்க வேண்டும். அப்படி இருக்கையில், சாம் குர்ரான் மற்றும் மனிஷ் பாண்டே ஆகியோரை எடுக்க முயற்சிக்கும் என நான் நினைக்கிறேன்.

சாம் குர்ரான் இதற்கு முன்பாக சிஎஸ்கே அணிக்காக சிறந்த விளையாட்டை வெளிப்படுத்தி உள்ளார். அதனால் அவரை எடுக்க சிஎஸ்கே அணி முயற்சி செய்யும். அதேபோல ஐபிஎல் தொடரில் சிறந்த வீரராக விளங்கி உள்ள மனிஷ் பாண்டவையும் எடுக்க முயற்சி செய்யும் என்று நான் கருதுகிறேன். ஐபிஎல் தொடரில் அதிக அனுபவம் கொண்ட மனிஷ் பாண்டே, சிஎஸ்கே கலாச்சாரத்திற்கு நன்கு பொருந்துவார்.

அவர்களை சிஎஸ்கே எடுக்க முயலவில்லை என்றால் வேறு திட்டங்களையும் அவர்கள் போட்டு வைத்திருக்கலாம்" என உத்தப்பா கூறி உள்ளார்.

Also Read | "கைநீட்டி கத்தாதீங்க, உங்க வேலைக்காரி இல்ல நான்".. நடுவானில் நடந்த சண்டை.. ஆவேசமான விமான பணிப்பெண்!!

CRICKET, ROBIN UTHAPPA, CSK, CSK STRATEGY, PLAYERS, IPL2023

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்