“நீ சின்னப் பையன், அது மாதிரி நடந்துக்கோ”.. ஹர்சல் படேலுடன் சண்டை.. முதல் முறையாக ரியான் பராக் விளக்கம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்சல் படேல் உடனான மோதல் குறித்து ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் ரியான் பராக் விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியாவில் நடந்த 15-வது சீசன் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் ரியான் பராக், மைதானங்களில் நடந்து கொண்ட விதம் கடும் விமர்சனங்களை சந்தித்தது.
கேட்ச் பிடித்தவுடன் பந்தை கீழே கொண்டு சென்று அம்பயர்களை சரிபார்த்துக்கொள்ளும்படி கிண்டலடிப்பது, ஃபீல்டிங்கில் சீனியர் வீரர்களிடம் ஆக்ரோஷத்துடன் நடந்துக்கொள்வது, எதிரணி வீரர்களை முறைப்பது என தொடர்ந்து தன் சேட்டைகளை செய்து வந்தார். இதுகுறித்து முன்னாள் வீரர்கள் பலரும் ரியான் பராக்கிற்கு அறிவுரை வழங்கினர்.
இதனிடையே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின் போது, அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்சல் பட்டேலை ரியான் பராக் சீண்டினார். அது இருவருக்கும் இடையே வாக்குவாதமாக மாறியது. இதைப் பார்த்த சக வீரர்கள் ரியான் பராக்கையும், ஹர்சல் படேலையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
ஆனால் இருவரின் கோபமும் இதோடு முடியவில்லை. அப்போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. வழக்கமாக போட்டி முடிந்த பின் இரு அணி வீரர்களும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி செல்வார்கள். அந்த வகையில் ரியான் பராக் பெங்களூரு அணி வீரர்களிடம் கைக்குலுக்கி வந்தார். அப்போது ஹர்சல் படேலிடம் ரியான் பராக் கை நீட்டிய போது, அவர் ரியான் பராக்கை கண்டுகொள்ளாமல் நகர்ந்துவிட்டார். இந்த வீடியோ அப்போது இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், ஹர்சல் படேலுடனான மோதல் குறித்து ரியான் பராக் விளக்கம் அளித்துள்ளார். அதில், ‘கடந்த ஆண்டு நான் ஹர்சல் பட்டேல் பந்துவீச்சில் அவுட் ஆனேன். அப்போது என்னை டிரெஸ்ஸிங் ரூம் நோக்கி அவர் என்னை கை காட்டி இருக்கிறார். அப்போது நான் கவனிக்கவில்லை. ஹோட்டலுக்கு வந்து டிவியில் பார்த்த போது ஹர்சல் பட்டேல் செய்தது என் மனதை பாதித்தது. மீண்டும் இந்த சீசனில் ஹர்சல் பட்டேலை பார்த்த போது, அவர் செய்தது நினைவுக்கு வந்தது. அதனால், அவர் பந்துவீச்சில் அடித்துவிட்டு, அவர் கடந்த ஆண்டு செய்ததை நான் மீண்டும் செய்தேன். இதுதான் மோதலுக்கு காரணம்.
அப்போது முகமது சிராஜ் என்னிடம் வந்து, “நீ சின்னப் பையன், சின்னப் பையன் மாதிரி நடந்து கொள்” என்று கூறினார். ஆனால் போட்டி முடிந்ததும் ஹர்சல் பட்டேல் என்னிடம் கைக்குலுக்காமல் சென்றுவிட்டார். அது கொஞ்சம் சிறுபிள்ளைத்தனமாக எனக்கு தெரிந்தது’ என ரியான் பராக் கூறியுள்ளார். இந்த ஐபிஎல் சீசனில் 17 போட்டிகளில் விளையாடியுள்ள ரியான் பராக் ஒரு அரைசதம் உள்பட 183 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read | என்னது ‘லிப்ஸ்டிக்’ தாவரமா..! இந்தியாவில் 100 வருசத்துக்கு அப்புறம் கண்டுபிடிப்பு.. எங்கே தெரியுமா..?
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “உன்னால சாதிக்க முடியாதுன்னு நெறைய பேர் சொன்னாங்க, ஆனா..!” IPL கோப்பை வென்ற தம்பிக்கு க்ருணால் உருக்கமாக வாழ்த்து..!
- ‘செம சர்ஃப்ரைஸ்’.. IPL கப் ஜெயிச்ச குஜராத் 6-வது இடம்.. RCB முதலிடம்.. வெளியான ‘வேறலெவல்’ தகவல்..!
- “இன்னும் 2 வருசத்துல இந்தியாவுக்கு புது கேப்டன் தேவைப்பட்டா.. பாண்ட்யாவை போடுங்க”.. முன்னாள் வீரர் பரபரப்பு டுவீட்..!
- “சஞ்சு சாம்சன் அப்படி சொன்னது ஆச்சரியமா இருந்துச்சு”.. IPL final-ல் RR அணி செய்த தவறு.. சுட்டிக்காட்டிய சச்சின்..!
- IPL தொடரில் கடும் விமர்சனத்தை சந்தித்த ரியான் பராக்.. அடுத்த சீசனில் மாறும் ரோல்?.. RR கோச் முக்கிய தகவல்..!
- IPL 2022: பெரிய தலைங்களுக்கு இடம் இல்லை... தொடரின் சிறந்த அணி… சச்சின் XI-ல் யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா
- “புகழப்படாத ஹீரோக்கள்”.. IPL இவ்ளோ சிறப்பா நடக்க காரணமே இவங்கதான்.. பிசிசிஐ அசத்தல் அறிவிப்பு..!
- IPL 2022 : கோப்பையை வென்ற குஜராத் டைட்டன்ஸ்.. ஐபிஎல் Start ஆகுறதுக்கு முன்னாடி தோனி சொன்ன விஷயம்.. "கரெக்டா Connect ஆகுதே"
- “நான் நெறைய டீம்ல விளையாடி இருக்கேன், ஆனா...!” RCB ரசிகர்கள் பற்றி உருக்கமாக DK சொன்ன வார்த்தை..!
- "எல்லாரும் என்ன பட்லர் 'Wife'ன்னு நெனச்சுட்டாங்க, ஆனா.." பிரபல வீரரின் மனைவி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்