"'பவுலிங்' போடச் சொன்னா என்ன தம்பி பண்றீங்க??.." 'இளம்' வீரரின் செயலால் குழம்பிய 'கெயில்'.. 'வார்னிங்' கொடுத்த 'நடுவர்'.. 'வைரல்' வீடியோ!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இன்றைய ஐபிஎல் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி வரும் நிலையில், முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்தது.

பஞ்சாப் அணியின் கேப்டன் கே எல் ராகுல் (KL Rahul) மற்றும் தீபக் ஹுடா (Deepak Hooda) ஆகியோர் அதிரடியாக ஆடி, ரன்கள் குவித்ததால், அந்த அணி சிறப்பான ஸ்கோரை எட்டியது. தொடர்ந்து, கடின இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி ஆடி வரும் நிலையில், பஞ்சாப் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது பரபரப்பு சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.

மொத்தம் இந்த போட்டியில், ராஜஸ்தான் அணி 8 பந்து வீச்சாளர்களை ராஜஸ்தான் அணி பயன்படுத்தியிருந்தது. இதில், ரியான் பராக் (Riyan Parag) ஒரு ஓவர் வீசி, 7 ரன்கள் மட்டும் கொடுத்து, கெயில் விக்கெட்டை வீழ்த்தினார். ஆனால், இந்த ஓவரில் ரியான் பராக் செய்த செயல் ஒன்று, அதிகம் வைரலாகி வருகிறது. ரியான் கெயிலுக்கு வீசிய பந்து ஒன்றை, ஷோல்டரை சுற்றிப் போடாமல், கிடை மட்டமாக, பந்து வீச தெரியாதவர் போல, கையை சரித்து வைத்துக் கொண்டு வீசினார்.

இவரின் பவுலிங்கை பார்த்த கெயில், நிச்சயம் ஒரு நொடி குழம்பி போயிருப்பார். தொடர்ந்து, ரியானின் பந்து வீச்சைக் கவனித்த போட்டி நடுவர், இப்படி எல்லாம் பந்து வீசக் கூடாது எனக்கூறி, அவருக்கு வார்னிங் ஒன்றைக் கொடுத்தார். வார்னிங் ஒன்றைப் பெற்றாலும், அதன் பிறகு சிறப்பாக பந்து வீசிய ரியான், கெயிலின் விக்கெட்டையும் அதே ஓவரில் வீழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து,  ரியான் செய்த பவுலிங், பார்ப்பதற்கு இந்திய வீரர் கேதார் ஜாதவின் பந்து வீச்சைப் போல இருப்பதாக, நெட்டிசன்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்