முதல் மேட்ச்'ல Face mask டிரெண்ட்.. இப்போ Flying Kiss.. "ரிஷி தவான் யாருக்கு இத குடுத்தாரு??"
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகுஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி, புள்ளிப் பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளது.
ஹைதராபாத் அணிக்கு எதிராக மட்டுமே தோல்வி அடைந்திருந்த குஜராத் அணி, பஞ்சாப் அணிக்கு எதிராக களமிறங்கி இருந்தது.
முதலில் பேட்டிங் செய்த குஜராத், 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து, 143 ரன்கள் எடுத்திருந்தது. தமிழக வீரர் சாய் சுதர்ஷன், ஐபிஎல் தொடரில் முதல் அரை சதத்தை பதிவு செய்திருந்தார்.
எளிதாக வென்ற பஞ்சாப் கிங்ஸ்
65 ரன்கள் எடுத்திருந்த சாய் சுதர்ஷன், குஜராத் அணி கவுரவமான ஸ்கோரை எட்டவும் உதவி செய்திருந்தார். அவரது இன்னிங்ஸ் குறித்து பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணியில், ஷிகர் தவான், பனுக்கா ராஜபக்ஷே, லிவிங்ஸ்டன் ஆகியோர் சிறப்பாக ஆடி ரன் சேர்க்க, 16 ஆவது ஓவரில் இலக்கை எட்டிப் பிடித்தது பஞ்சாப் அணி.
ரிஷி கொடுத்த Flying Kiss
அதிலும், ஷமி வீசிய 16 ஆவது ஓவரில், 3 சிக்ஸர்களுடன் 28 ரன்கள் அடித்த லிவிங்ஸ்டனைக் கண்டு பலரும் மிரண்டு போயுள்ளனர். அதே போல, அவர் அடித்த 117 மீட்டர் சிக்சரும் இந்த ஐபிஎல் தொடரில் அதிக தூரம் சென்ற சிக்ஸராக பதிவாகி உள்ளது. இந்நிலையில், இந்த போட்டியின் போது ரிஷி தவான் கொடுத்த 'Flying Kiss' ஒன்று, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
5 ஆண்டுகளுக்கு பின் என்ட்ரி..
கடைசியாக, சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன், ஐபிஎல் தொடரில் களமிறங்கி இருந்த ரிஷி தவான், அதன் பின்னர் நடப்பு சீசனில் தான், பஞ்சாப் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் ஆடி வருகிறார். இதற்கு நடுவே, உள்ளூர் போட்டிகளில் ஆடி ஆல் ரவுண்டர் திறனையும் அவர் நிரூபித்ததால், ஐபிஎல் ஏலத்தில் அவரை பஞ்சாப் அணி எடுத்திருந்தது.
கொண்டாடிய ரிஷி தவான்
தொடர்ந்து, கடந்த சில போட்டிகளாக ஆடி வரும் ரிஷி தவான், சிறப்பாக பஞ்சாப் அணிக்கு வேண்டி செயல்பட்டு வருகிறார். குஜராத் அணிக்காக பல போட்டிகளில் சிறப்பாக ஆடி ரன் சேர்த்த கேப்டன் ஹர்திக் பாண்டியாவை, ஒரே ரன்னில் நடையைக் கட்ட வைத்தார் ரிஷி தவான். அவரை அவுட் எடுத்ததும், Flying Kiss கொடுத்து கொண்டாடினார் ரிஷி தவான்.
இந்த தொடரின் முதல் போட்டியில், மூக்குப் பகுதியில் நடந்த சர்ஜரிக்கு வேண்டி, ரிஷி தவான் அணிந்திருந்த 'Face Mask' ஒன்றும் பெரிய அளவில் வைரலாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து, தற்போது அவரது Flying Kiss கொண்டாட்டமும் வைரலாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "ரிஷி தவான் கண்ணாடி'ய பாத்து தான் ராயுடு பொளந்து கட்டி இருப்பாரு.." முன்னாள் வீரர் போட்ட முடிச்சு.. "இதுல என்னங்க இருக்கு??.."
- IPL 2022 : ரிஷி தவான் போட்டிருந்த 'Mask'.. "என்னங்க இது புதுசா இருக்கே?.." குழம்பிய ரசிகர்கள்.. "அட, இதுதான் விஷயமாம்.."
- 6 வருசத்துக்கு அப்றம் ஐபிஎல் ஆடும் பிரபல வீரர்!!.. 'CSK' அணிக்கு எதிராக பெரிய பிளான் போட்ட PBKS??..
- கருப்பு உடையில் கூலான டான்ஸ்.. Hubby-யோட டீம் விக்கெட் எடுத்ததும் ஆட்டம் போட்ட மனைவி.. வைரலாகும் வீடியோ!
- “அப்பவே சொன்னேன்.. இப்படி ஏதாவது நடக்கும்னு”.. ஹர்திக் பாண்ட்வை முன்னாடியே எச்சரித்த பாகிஸ்தான் வீரர்..!
- அம்மாடியோவ்..! என்னா அடி.. ‘ரெண்டாக உடைந்த ஸ்டம்ப்’.. RR-ஐ மிரள வைத்த பாண்ட்யா..!
- "நல்லா ஆடியும் வாய்ப்பு இல்ல.." 'தமிழக' வீரர் விஷயத்தில் ஹர்திக் பாண்டியா எடுத்த முடிவு.. கொதித்து எழுந்த ரசிகர்கள்
- "ஹர்திக் பாண்டியா மட்டும் இந்த மேட்ச்ல 50 அடிக்கட்டும்".. ஸ்டேடியத்தில் பெட் கட்டிய ரசிகர்.. அவசரப்பட்டுட்டியே குமாரு..!
- ‘ஒரு சீனியர் ப்ளேயர் கிட்ட இப்படி நடந்துப்பீங்க’.. ஹர்திக் பாண்ட்யா செய்த செயல்.. விட்டு விளாசும் நெட்டிசன்கள்..!
- IPL 2022 : "அதுக்கு தான் நான் 'Waiting'.." தோனியைக் குறிப்பிட்டு ஹர்திக் பாண்டியா சொன்ன விஷயம்.. மல்லுக்கட்ட ரெடி..