VIDEO: பாவங்க மனுசன்.. இப்டி ‘அவுட்’ ஆவோம்னு கொஞ்சம் கூட நெனச்சிருக்க மாட்டாரு.. சோகமாக வெளியேறிய ரிஷப் பந்த்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வித்தியாசமாக ரன் அவுட்டான ரிஷப் பந்தின் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

போலீசை பார்த்ததும் தப்பி ஓடிய லாரி டிரைவர்.. ‘உள்ள என்ன இருக்குன்னு போய் பாருங்க’.. அதிர்ந்துபோன அதிகாரிகள்..!

முதல் ஒருநாள் போட்டி

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டி, நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 176 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர் 57 ரன்கள் அடித்தார். இந்திய அணியைப் பொறுத்தவரை சஹால் 4 விக்கெட்டுகளும், வாசிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளும், பிரஷித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளும், முகமது சிராஜ் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இந்தியா வெற்றி

இதனை அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி, 28 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. அதனால் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் ஷர்மா 60 ரன்கள் அடித்தார்.

வித்தியாசமான ரன் அவுட்

இந்த நிலையில், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் வித்தியாசமாக ரன் அவுட்டான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இப்போட்டியில் 4-வது வீரராக களமிறங்கிய ரிஷப் பந்த் 9 பந்துகளில் 2 பவுண்டரிகள் உட்பட 11 ரன்கள் அடித்திருந்தார். அப்போது சூர்யகுமார் யாதவ் அடித்த பந்து வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சாளர் அல்ஜாரி ஜோசப் காலில் பட்டு, எதிர்முனை ஸ்டெம்பில் பட்டது.

சோகமாக வெளியேறிய ரிஷப் பந்த்

அப்போது ரிஷப் பந்த் ரன் ஓட முயன்று கிரிஸுக்கு வெளியே நின்றதால், ரன் அவுட்டானார். இப்படி அவுட் ஆவோம் என்று அவர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அதனால் சோகமாக பெவிலியன் திரும்பினார். அப்போது வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரான், ரிஷப் பந்தின் தோளில் தட்டி ஆறுதல் கூறினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

கூகுளில் இருந்த மிகப்பெரிய ஓட்டை.. எப்படி இது உங்க கண்ணுல மாட்டுச்சு? கண்டுபிடித்த இளைஞருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள்

RISHABH PANT, RUN OUT, 1ST ODI, AHMEDABAD, WEST INDIES, ரிஷப் பந்த், முதல் ஒருநாள் போட்டி, வெஸ்ட் இண்டீஸ் அணி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்