"'Practice' சமயத்துல கூட இப்டி தானா 'பாஸ்'??.." 'பயிற்சி'க்கு நடுவே பண்ட் செய்த 'கலாட்டா'... வேற லெவலில் வைரலாகும் 'வீடியோ'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடர் நாளை தொடங்கவுள்ளதால், ஒட்டு மொத்த ரசிகர்களும் வேற லெவல் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

"'Practice' சமயத்துல கூட இப்டி தானா 'பாஸ்'??.." 'பயிற்சி'க்கு நடுவே பண்ட் செய்த 'கலாட்டா'... வேற லெவலில் வைரலாகும் 'வீடியோ'!!

இதில், ஐபிஎல் அணிகளில் ஒன்றான டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஷ்ரேயாஸ் ஐயர், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரின் போது காயமடைந்திருந்தார். இதனால், அவரால் ஐபிஎல் தொடரில் பங்குபெற முடியவில்லை. இதனையடுத்து, டெல்லி அணியின் கேப்டனாக மற்றொரு இளம் வீரர் ரிஷப் பண்ட்டை டெல்லி அணி நிர்வாகம் நியமித்தது.
rishabh pant trolls sam billings during practice session

கடந்த ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர்களில் சிறப்பாக பேட்டிங் செய்த ரிஷப் பண்ட்டின் ஆட்டத்தின் காரணமாக, ஐபிஎல் தொடரிலும் அவர் ஒரு ரவுண்டு வருவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கும் அதே வேளையில், முதல் முறையாக ஐபிஎல் அணியின் கேப்டனாகவும் அவர் செயல்படவுள்ளது, அவரது ஆட்டத்தின் மீது இன்னும் அதிக ஆவலை ஏற்படுத்தியுள்ளது.
rishabh pant trolls sam billings during practice session

பொதுவாக, பேட்டிங்கில் அதிரடி காட்டும் ரிஷப் பண்ட், கீப்பிங் செய்யும் போது, எதிரணி வீரர்களுடன் ஜாலியாக மல்லுக் கட்டுவது, சக வீரர்கள் பந்து வீசிய பின் நக்கலாக எதையாவது சொல்வது என்ற வழக்கத்தைக் கொண்டவர்.


இந்நிலையில், ஐபிஎல் தொடருக்கான பயிற்சியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து வீரர் சாம் பில்லிங்ஸ் பேட்டிங் செய்ய, ரிஷப் பண்ட் கீப்பிங் செய்து கொண்டிருந்தார். அப்போது கூட, பண்ட் அமைதியாக இல்லாமல், சாம் பில்லிங்ஸ் சில பந்துகளை எதிர்கொள்ள தடுமாறியது பற்றி, கிண்டலாக பேசிக் கொண்டே இருந்தார்.

 

இது தொடர்பான வீடியோவை, டெல்லி அணி தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'பயிற்சியின் போது கூட, ஸ்டம்பிற்கு பின்னால், பண்ட்டால் அமைதியாக இருக்க முடியவில்லை' என குறிப்பிட்டுள்ளது. இந்த வீடியோ, தற்போது நெட்டிசன்களிடையே அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்