"இவங்க 2 பேருக்கும் வாழ்நாள் முழுவதும் கடன் பட்டிருக்கேன்".. உயிரை காப்பாத்திய இளைஞர்கள்.. ரிஷப் பண்ட் உருக்கம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த இளம் வீரர் ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கி காயம் அடைந்திருந்த நிலையில், தற்போது அவர் எழுதியுள்ள பதிவு பலரையும் நெகிழ செய்திருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | ஆக்ரோஷமாக சரிந்த பனி.. சுரங்கத்தில் சிக்கிய 172 தொழிலாளர்கள்.. திக்.. திக்.. வீடியோ..!

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ஆக வலம் வருபவர் ரிஷப் பண்ட். இடது கை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இதுவரை 33 டெஸ்ட் போட்டிகளில் 5 சதங்கள் மற்றும் 11 அரை சதங்களுடன் 2,271 ரன்கள் எடுத்துள்ளார். அவர் 30 ODI மற்றும் 66 T20I போட்டிகளில்  முறையே 865 மற்றும் 987 ரன்கள் எடுத்துள்ளார். சமீபத்தில் வங்க தேச கிரிக்கெட் அணிக்கு எதிரான தொடரில் ஆடி இருந்தார்.

இந்நிலையில், உத்தரகண்ட் மாநிலம் ரூர்க்கி அருகே பண்ட், கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்தில் பலத்த காயமடைந்த அவர் உடனடி சிகிச்சைக்கு  சக்ஷாம் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் உயர் சிகிச்சைக்கு டெராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். புத்தாண்டுக்கு முன்னதாக தனது தாயை ஆச்சரியப்படுத்த ரிஷப் பந்த் பயணம் செய்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகி இருந்தது.

விபத்தின் காரணமாக அவருக்கு முழங்காலில் தசைநார் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இதனால் பண்ட் மீண்டும் இந்திய அணியில் இணைய மாதக்கணக்கில் காலம் ஆகலாம் என கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

முன்னதாக, ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கிய போது அவரை ரஜத், நிஷு, சுஷில் மன் என்ற நபர்கள் தான் காரில் இருந்து மீட்டதாக தெரிகிறது. இவர்களுக்கு சமீபத்தில் விருதும் அறிவிக்கப்பட்டிருந்தது. அப்படி ஒரு சூழலில், தன்னை விபத்தில் இருந்து மீட்ட நபர்களை மருத்துவமனையில் நேரில் அழைத்து சந்தித்திருந்தார் ரிஷப் பண்ட்.

இந்நிலையில், பண்ட் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில்,"ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக என்னால் நன்றி சொல்ல முடியாமல் போயிருக்கலாம். ஆனால் விபத்தின் போது எனக்கு உதவிய இந்த இரண்டு ஹீரோக்களையும் நான் குறிப்பிட்டே ஆக வேண்டும். இவர்களுடைய உதவியால் நான் பாதுகாப்பாக மருத்துவமனைக்குச் சென்றேன். ரஜத் குமார் & நிஷு குமார் ஆகிய இருவருக்கும் நன்றி. இவர்களுக்கு நான் என்றென்றும் நன்றியுடையவனாகவும் கடமைப்பட்டவனாகவும் இருப்பேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். அதனுடன் ரஜத் குமார் & நிஷு குமார் ஆகியோரது புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். இந்த பதிவு ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.

Also Read | "என்ன வந்தாலும் அவன் கூட தான் இருப்போம்".. தன்பாலின ஈர்ப்பாளராக மாறிய மகன்.. பேரணியில் கலந்து கொண்ட தாய்

CRICKET, RISHABH PANT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்