‘கிரேட் எஸ்கேப் ஆன ரிஷப் பந்த்’.. இல்லன்னா கேப்டனா முதல் மேட்சே மோசமான ரெக்கார்ட்டா மாறியிருக்கும்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் ரன் அவுட்டில் இருந்து தப்பிய ரிஷப் பந்தின் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | கடைசி ஓவர்ல ஏன் பாண்ட்யா அப்படி பண்ணார்..? தினேஷ் கார்த்திக் அதிருப்தி.. கடுப்பான நெட்டிசன்கள்..!

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டி20 போட்டி நேற்று டெல்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக இஷன் கிஷன் 76 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 36 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 31 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 19.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக ரஸ்ஸி வான் டெர் டுசென் 75 ரன்களும், டேவிட் மில்லர் 64 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியை பொறுத்தவரை புவனேஸ்வர் குமார், அக்சர் படேல் மற்றும் ஹர்சல் படேல் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

இந்த டி20 தொடருக்கு கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் திடீரென அவர் காயம் காரணமாக விலகியதால், ரிஷப் பந்த் கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இந்த சூழலில் இஷன் கிஷன் அவுட்டான பின்பு ரிஷப் பந்த் பேட்டிங் செய்ய வந்தார். அப்போது ஸ்ரேயாஸ் ஐயர் பந்தை அடித்ததும், ரிஷப் பந்த் வேகமாக ரன் எடுக்க ஓடினார். அப்போது எதிர்பாராத விதமாக தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா மீது மோதி ரிஷப் பந்த் கீழே விழுந்தார்.

உடனே டிரிஸ்டியன் ஸ்டப்ஸ் பந்தை எடுத்து ரன் அவுட் செய்ய முயன்றார். ஆனால் பந்து ஸ்டம்ப் மீது விழவில்லை. இந்த நேரத்தை பயன்படுத்தி கொண்டு ரிஷப் பந்த் வேகமாக க்ரீஸீக்குள் நுழைந்தார்.இதன் மூலம் கேப்டனாக விளையாடிய முதல் போட்டியில் பந்தை சந்திக்காமலேயே ரிஷப் பந்த் ரன் அவுட் ஆகி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Also Read | ‘தனக்கு தானே தாலி கட்டி கல்யாணம்’.. சொன்ன மாதிரியே செஞ்சு காட்டிய இளம்பெண்.. வைரல் போட்டோ..!

 

CRICKET, RISHABH PANT, KAGISO RABADA, INDIAN WICKETKEEPER, ரிஷப் பந்த்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்