"அதெல்லாம் ஒண்ணுமில்ல பாஸ்".. ஹர்திக் பாண்டியா பேட்டிங் செய்ய ரிஷப் பந்த் செஞ்ச தியாகம்.. ரசிகர்களை நெகிழ வைத்த வீடியோ!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி 20 உலக கோப்பை தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டாவது அரை இறுதி போட்டியில், இங்கிலாந்து அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது.
Also Read | "எது, LCUல தோனியா?".. வர்ணனை செஞ்சிட்டு இருந்தப்போ லோகேஷ் சொன்ன சூப்பர் விஷயம்!!
இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் இரண்டாவது அரை இறுதி போட்டியில் மோதி இருந்தது. அடிலெய்ட் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சைத் தேர்வு செய்திருந்தது.
அதன்படி ஆடிய இந்திய அணி, நிதானமாகவே ரன் சேர்த்தது. இதனால், பெரிய அளவில் ரன் வருமா என்றும் கேள்வி இருந்தது. ஆனால், கடைசி கட்டத்தில் ஹர்திக் பாண்டியா அதிரடியாக ஆடி ரன் சேர்க்க, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜோஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் நங்கூரம் போல நிலைத்து நின்று ஆடி ரன் சேர்த்தனர்.
இதன் காரணமாக, 16 ஓவர்களில் இலக்கை எட்டிய இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது. ஜோஸ் பட்லர் 80 ரன்களும், அலெக்ஸ் ஹேல்ஸ் 86 ரன்களும் எடுத்து அசத்தி இருந்தனர்.
இறுதி போட்டிக்கு இங்கிலாந்து அணி முன்னேறி உள்ளதால், நவம்பர் 13 ஆம் தேதியன்று நடக்க உள்ள டி 20 உலக கோப்பை இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியையும் அவர்கள் சந்திக்க உள்ளனர். ஒரு விக்கெட் கூட எடுக்காமல் இந்திய அணி தோல்வி அடைந்ததால் ரசிகர்களும் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனால், சோஷியல் மீடியாவில் பல்வேறு கருத்துக்களையும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, கடைசி ஓவரில் ரிஷப் பந்த் செய்த விஷயம் அதிகம் வைரலாகி வருகிறது. இந்திய அணி பேட்டிங் செய்த போது கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிக் கொண்டிருந்தார் ஹர்திக் பாண்டியா.
ஜோர்டன் வீசிய கடைசி ஓவரில் முதல் இரண்டு பந்துகளில் தலா 2 சிங்கிள்கள் எடுக்கப்பட்டது. தொடர்ந்து, மூன்றாவது பந்தை எதிர்கொண்ட ரிஷப் பந்த், அதனை மிஸ் செய்தார். கீப்பர் நின்ற ஜோஸ் பட்லர் கைக்கு பந்து போக, தனக்கு ஸ்ட்ரைக் வேண்டும் என ஹர்திக் பாண்டியா ஓடி வந்தார். அப்போது நான் ஸ்ட்ரைக்கர் திசையில் ரன் அவுட் செய்ய ஜோர்டன் ஓட, ஹர்திக் பாண்டியா அடிக்க வேண்டும் என்பதற்காக தனது விக்கெட்டை தியாகம் செய்து ரன் அவுட் ஆனார் ரிஷப் பந்த்.
போகும் போது Thumbs up காட்டியபடி சென்றார் ரிஷப் பந்த். அவர் ரன் அவுட் ஆனதால் கடைசி 3 பந்துகளை எதிர்கொள்ளும் வாய்ப்பு ஹர்திக் பாண்டியாவிற்கு கிடைத்தது. இதில் முதல் இரண்டு பந்துகளில் 10 ரன்கள் சேர்த்த ஹர்திக் பாண்டியா, கடைசி பந்திலும் ஃபோர் அடித்திருந்தார். ஆனால், அவர் ஹிட் விக்கெட் ஆனதால் அந்த ரன் சேர்க்கப்படவில்லை.
ஹர்திக் பாண்டியா அடிக்க வேண்டும் என்பதற்காக தனது விக்கெட்டை தியாகம் செய்த ரிஷப் பந்த்தை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
Also Read | T 20 World Cup 2022 : கேப்டன்கள் எடுத்த செல்ஃபி.. Semi Finals வர டீம் பத்தி அப்பவே இருந்த 'செம' கனெக்ஷன்!!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஆஸ்திரேலியாவில் கைதான இலங்கை வீரர் தனுஷ்கா குணதிலகா.. புகார் அளித்த பெண் சொல்வது என்ன? பரபரப்பு தகவல்!!
- "என்ன ஆனாலும் அதை மட்டும் நடக்கவிட மாட்டோம்".. இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லரின் பரபர பேச்சு.. என்னவாம்?
- தமிழில் பேசி அசத்திய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷதாப் கான்.. ஶ்ரீகாந்த் & பாவனா செய்த கலாட்டா! வைரல் வீடியோ 🤣
- "டவுட்டே இல்ல, இவரு தான், ஆனா".. தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த் விஷயத்தில் டிவில்லியர்ஸ் சொன்ன பதில்!!
- 19 வருஷத்துல முதல் தடவை.. நெருங்கும் Semi Finals.. தோனிய தொடர்பு படுத்தி வெளியான சுவாரஸ்ய தகவல்!!
- IPL 2023 ஏலம்.. எங்கே, எப்போ நடக்க போகுது?.. வெளியான தகவல்.. உற்சாகத்தில் ரசிகர்கள்..!
- "உங்களை ரொம்ப பிடிக்கும் விராட்.. ஆனா".. கோலிக்கு பீட்டர்சன் வச்ச கலகல கோரிக்கை.. அடிச்ச ஷாட்லாம் கண்ணுமுன்னாடி வந்துபோகுமா இல்லையா.?😂
- "இந்தியா தான் உலககோப்பை ஜெயிக்கும்னு மனசு சொல்லுது.. ஆனா மூளை.." வைரலாகும் பாவனாவின் கணிப்பு!
- இத எல்லாம் எப்பவோ பண்ணிட்டாரு".. 8 வருசத்துக்கு முன்னாடியே சூர்யகுமார் அடிச்ச அடி.. வைரல் சம்பவம்!!
- T20 Worldcup: இந்தியா - இங்கிலாந்து மோதும் அரையிறுதி போட்டி.. பிட்ச் யாருக்கு சாதகம்? மழை வருமா? முழு தகவல்