VIDEO: ‘கொஞ்சம் கூட யோசிக்கல’!.. கண் இமைக்கும் நேரத்தில் எடுத்த ‘ரன் அவுட்’.. திரும்பிப் பார்க்க வைத்த இளம்வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ரன் அவுட்டான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடப்பு ஐபிஎல் தொடரின் 7-வது போட்டி இன்று (15.04.2021) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ப்ரீத்வி ஷா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். இதில் ப்ரீத்வி ஷா 2 ரன்னிலும், தவான் 9 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர். இதனை அடுத்து வந்த ரஹானேவும் 8 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். இதனால் 36 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை டெல்லி அணி இழந்தது.

இந்த சமயத்தில் ஜோடி சேர்ந்த டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் மற்றும் லலித் யாதவ் கூட்டணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் அவ்வப்போது பவுண்டரிகளை விளாசி ஸ்கோரை மெல்ல உயர்த்தினர். அதில் ராகுல் திவேட்டியா வீசிய 11-வது ஓவரில், 4 பவுண்டரிகளை விளாசி ரிஷப் பந்த அசத்தினார்.

இந்த நிலையில் ரியான் பராக் வீசிய 13-வது ஓவரின் 4-வது பந்தை லான் ஆஃப் திசையில் ரிஷப் பந்த் அடித்தார். ஆனால் பந்து ரியான் பராக்கின் கைக்கு சென்றது. அப்போது ரிஷப் பந்த் ரன் எடுக்க ஓடி வந்தார். உடனே கண் இமைக்கும் நேரத்தில் ஸ்டம்பை நோக்கி வீசி ரிஷப் பந்தை அவர் ரன் அவுட் செய்தார்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டாக, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன்களை டெல்லி அணி எடுத்தது. இதில் அதிகபட்சமாக ரிஷப் பந்த் 51 ரன்கள் எடுத்தார். இந்த நிலையில் 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி விளையாடி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்