'ஆஹா... நம்ம அருமை பெருமைக்கு எல்லாம் ஆப்பு வைக்க பாக்குறாங்களே!'.. 'சூனா பானா' போல விழித்துக் கொள்வாரா பண்ட்?.. செம்ம கடுப்பில் கோலி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

2019ஆம் ஆண்டு இளம் வீரர் ரிஷப் பண்ட்க்கு வாய்ப்புகளை அளித்தது. அதை அவர் வீணாக்கினார்.

அதன் விளைவாக, 2020 ஆண்டில் கடும் அழுத்தத்தில் இருந்த அவர், லாக்டவுன் காரணமாக தற்போது இந்திய அணியில் இருந்தே மொத்தமாக வெளியேறும் நிலையில் இருக்கிறார்.

கேப்டன் விராட் கோலி அவருக்கு பல விமர்சனங்களை தாண்டி அதிக வாய்ப்பு அளித்து விட்ட நிலையில், அவரை நீக்க அதிரடி காரணம் ஒன்றை வைத்துள்ளார்.  

இந்திய கிரிக்கெட் அணியில் ரிஷப் பண்ட் அளவுக்கு இளம் வயதில் பெரிய புகழ் வெளிச்சம் பெற்றவர்களும், அணியில் வாய்ப்பு பெற்றவர்களும் யாரும் இல்லை எனக் கூறலாம். ஆனால், அதை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.

அணியில் தற்போது வாய்ப்பையும் இழக்கும் நிலையில் இருக்கிறார். முதலில் தோனிக்கு மாற்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என கூறப்பட்ட ரிஷப் பண்ட், ஒரு கட்டத்தில் தோனி போலவே ஆடத் துவங்கினார். விக்கெட் கீப்பிங், பேட்டிங், உடல் மொழி ஆகியவற்றில் தோனியை கொண்டு வந்தார். ஆனால், அது பலனளிக்கவில்லை. 

அதன் விளைவாக ரிஷப் பண்ட் தன் இயல்பான ஆட்டத்தை தொலைத்து மோசமான பார்மை அடைந்தார். அவர் மீது கடும் விமர்சனம் எழுந்தது. அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்த போதும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு அளித்து வந்தார் கேப்டன் கோலி. 

ஆஸ்திரேலிய தொடரில் ரிஷப் பண்ட் காயம் காரணமாக ஒரு போட்டியில் விலகிய நிலையில், அவருக்கு பதில் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக சிறப்பாக செயல்பட்டார். அப்போது முதல் அவர் இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியின் விக்கெட் கீப்பராக மாறினார். 

இந்த நிலையில், ஆறு மாத லாக்டவுனுக்கு பின் நடந்த 2020 ஐபிஎல் தொடரில் தன் பார்மை நிரூபிக்க காத்திருந்தார் ரிஷப் பண்ட். ஆனால், அவரை விட கேஎல் ராகுல், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், விரிதிமான் சாஹா உள்ளிட்ட மற்ற விக்கெட் கீப்பர்கள் சிறப்பாக ஆடினர். 

இதற்கிடையே, ரிஷப் பண்ட் இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியில் இருந்து நீக்கப்பட்டார். அதற்கு காரணம் அவரது கடந்த கால செயல்பாடுகள் தான் என நினைத்த நிலையில் அவருக்கு மற்றொரு அதிர்ச்சி செய்தி காத்திருந்தது. 

லாக்டவுன் முடிந்து ஐபிஎல் தொடரில் பங்கேற்க ரிஷப் பண்ட் உடல் எடை அதிகரித்து காணப்பட்டார். அதை காரணமாக காட்டி பிசிசிஐ தேர்வுக் குழு நீக்கி இருந்தது. இதுவரை எந்த இந்திய வீரரும் இப்படி ஒரு காரணத்தை காட்டி நீக்கப்பட்டது இல்லை. ஒரு வீரரை அணியில் இருந்து நீக்க இதெல்லாம் ஒரு காரணமா? என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்தது.

இதன் பின்னணியில் கேப்டன் விராட் கோலி இருக்கலாம் என கூறப்படுகிறது.

கோலி தன் அணி வீரர்கள் உடற்தகுதியுடன் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர்.  மோசமான பார்ம், உடல் எடை அதிகரிப்பு என பல்வேறு காரணங்கள் வரிசையாக இருக்கும் நிலையில், ரிஷப் பண்ட்டுக்கு இனி அணியில் இடம் கிடைக்குமா? என்பது சந்தேகமே.

2020ஆம் ஆண்டு அந்த வகையில் பண்ட்டுக்கு மோசமான ஆண்டாக அமைந்துள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்