மீண்டும் நடக்க ஆரம்பித்த ரிஷப் பண்ட்.. அதுவும் தண்ணீருக்குள்ள.. வைரலாகும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்கரரான ரிஷப் பண்ட் தண்ணீருக்குள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

                          Images are subject to © copyright to their respective owners.

Also Read | "இது என்னோட லாஸ்ட் சான்ஸ்-ன்னு கெஞ்சுனேன்.. அப்போ கூட".. EX பாய் ஃப்ரண்ட் பற்றி.. அனிகா விக்ரமன் Breaking..!

ரிஷப் பண்ட்

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ஆக வலம் வருபவர் ரிஷப் பண்ட். இடது கை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட், பல்வேறு போட்டிகளில் இந்திய அணிக்காக சிறப்பாக ஆடி வெற்றியை தேடிக் கொடுத்துள்ளார். டெஸ்ட், டி 20 மற்றும் ஒரு நாள் போட்டி என அனைத்திலும் சிறந்து விளங்கி வரும் ரிஷப் பண்ட், ஐபிஎல் தொடரிலும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தார்.

Images are subject to © copyright to their respective owners.

விபத்து

இதனிடையே கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி உத்தரகண்ட் மாநிலம் ரூர்க்கி அருகே பண்ட், கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்தின் காரணமாக அவருக்கு முழங்காலில் தசைநார் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இதனால் பண்ட் மீண்டும் இந்திய அணியில் இணைய மாதக்கணக்கில் காலம் ஆகலாம் என கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இதனிடையே, தன்னால் பல்துலக்க முடிவதாகவும் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்வதாகவும் பண்ட் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

Images are subject to © copyright to their respective owners.

நடைப்பயிற்சி

இந்நிலையில், ரிஷப் பண்ட் தண்ணீருக்குள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். முன்னதாக, ஊன்றுகோலுடன் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். அதேபோல, சமீபத்தில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு அவர் செய்த ட்வீட் வைரலானது குறிப்பிடத்தக்கது.

Also Read | சாதாரண செருப்புக்குள்ள 69 லட்சம்.. ஏர்போர்ட் அதிகாரிகளையே அதிர வச்ச ஆசாமி.. வைரலாகும் வீடியோ..!

RISHABH PANT, RISHABH PANT HEALTH CONDITION

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்