"அத மட்டும் கரெக்ட்டா பண்ணியிருந்தா, இன்னைக்கி கதையே வேற?!.." 'லட்டு' மாதிரி வந்த 'சான்ஸ்'.. தவற விட்டு முழித்த 'பண்ட்'!.. வருந்திய 'டெல்லி' ரசிகர்கள்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற த்ரில்லிங்கான போட்டியில், ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியில், ரிஷப் பண்ட் (Rishabh Pant) ஓரளவு சிறப்பாக ஆடி அரை சதமடித்தார். மற்ற வீரர்கள் யாரும் பெரிய அளவில் ரன் குவிக்காததால், அந்த அணி 20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 147 ரன்களே எடுத்தது.

இதனைத் தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணிக்கும் ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. பட்லர், சாம்சன், வோஹ்ரா ஆகியோர் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். இதனால், போட்டி மெதுவாக டெல்லி பக்கம் சாய்ந்த போது, ராஜஸ்தான் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் டேவிட் மில்லர் (David Miller), தனியாளாக நின்று பட்டையைக் கிளப்பினார்.

இருந்த போதும், 16 ஆவது ஓவரில் அவரும் நடையைக் கட்ட, போட்டியில் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இறுதி இரண்டு ஓவர்களில், டெல்லி அணியின் வெற்றிக்கு 27 ரன்கள் தேவைப்பட போது, ஆல் ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் (Chris Morris), முன்னணி பந்து வீச்சாளர்களின் ஓவர்களில் 4 சிக்ஸர்கள் அடித்து, திரில் வெற்றியை ராஜஸ்தான் அணி பெற உதவினார்.

மோரிஸுக்கு பக்க பலமாக உனத்கட்டும் தனது விக்கெட்டை இழக்காமல் ஆடிக் கொண்டிருந்தார். இதனிடையே, ஆட்டத்தின் 18 ஆவது ஓவரில், மோரிஸ் மாற்றம் உனத்கட் (Unadkat) ஆகியோர் களத்தில் இருந்த போது, எளிதான ரன் அவுட் ஒன்றை ரிஷப் பண்ட் கோட்டை விட்டார்.

டாம் குர்ரான் வீசிய அந்த ஓவரில், பந்தை எதிர்கொண்ட மோரிஸ், அதனை அடித்து விட்டு, ஒரு ரன்னாக மாற் வேண்டி, வேகமாக ஓடினார். மறுமுனையில் நின்ற உனத்கட், க்ரீஸ்க்குள் வருவதற்கு முன்பாக, பந்து ரிஷப் பண்ட் கைக்குச் சென்று விட்டது. இதனால், ரன் அவுட் என எதிர்பார்த்த நிலையில், கைக்கு வந்த பந்தை பண்ட் நழுவ விட்டு, கையைக் கொண்டு மட்டும் ஸ்டம்பை அடித்து சிறந்த வாய்ப்பை தவற விட்டார்.


 

 

கிட்டத்தட்ட, ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு, 30 ரன்களுக்கு மேல் வரை அந்த சமயத்தில் தேவைப்பட்டிருந்த நிலையில், கைவசம் 3 விக்கெட்டுகள் மட்டுமே இருந்தது. இதனால், உனத்கட்டை அவுட் செய்திருந்தால், டெல்லி அணிக்கு அது சாதகமாக அமைந்திருக்கக் கூடும்.

இதனால், எளிய விக்கெட் வாய்ப்பை மட்டும் ரிஷப் பண்ட் தவற விடாமல், அணியின் வெற்றிக்கான வாய்ப்பையும் அவர் கோட்டை விட்டார். இதனிடையே, இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள், நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்