கார் விபத்தில் தன்னை காப்பாற்றியவர்களை நேரில் சந்தித்த ரிஷப் பண்ட்.. வைரலாகும் புகைப்படம்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த இளம் வீரர் ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கி காயம் அடைந்திருந்த நிலையில், தற்போது இது குறித்து சில தகவல்கள் வெளி வந்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "நடுவரிடம் கோபப்பட்டாரா தீபக் ஹூடா?".. முடிவால் கடுப்பான வீரர்.. பரபரப்பு சம்பவம்!!

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ஆக வலம் வருபவர் ரிஷப் பண்ட். இடது கை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இதுவரை 33 டெஸ்ட் போட்டிகளில் 5 சதங்கள் மற்றும் 11 அரை சதங்களுடன் 2,271 ரன்கள் எடுத்துள்ளார். அவர் 30 ODI மற்றும் 66 T20I போட்டிகளில்  முறையே 865 மற்றும் 987 ரன்கள் எடுத்துள்ளார். சமீபத்தில் வங்காளதேச கிரிக்கெட் அணிக்கு எதிரான தொடரில் ஆடி இருந்தார்.

இந்நிலையில், உத்தரகண்ட் மாநிலம் ரூர்க்கி அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிகாலையில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட், கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்தில் பலத்த காயமடைந்த அவர் உடனடி சிகிச்சைக்கு  சக்ஷாம் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் உயர் சிகிச்சைக்கு டெராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். புத்தாண்டுக்கு முன்னதாக தனது தாயை ஆச்சரியப்படுத்த ரிஷப் பந்த் பயணம் செய்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகி இருந்தது.

முன்னதாக, ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கிய போது அவரை ரஜத், நிஷு, சுஷில் மன் என்ற நபர்கள் தான் காரில் இருந்து மீட்டதாக தெரிகிறது. இவர்களுக்கு சமீபத்தில் விருதும் அறிவிக்கப்பட்டிருந்தது. அப்படி ஒரு சூழலில், தன்னை விபத்தில் இருந்து மீட்ட நபர்களை மருத்துவமனையில் நேரில் அழைத்து சந்தித்துள்ளார் ரிஷப் பண்ட்.

இந்த நிலையில், ரிஷப் பண்ட் மேல் சிகிச்சை குறித்து தற்போது மற்றொரு தகவலும் வெளியாகி உள்ளது. தற்போது டெஹ்ராடூனில் உள்ள ரிஷப் பண்ட், மேல் சிகிச்சைக்காக விமானம் மூலம் மும்பைக்கு கொண்டு செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அவரது முழங்காலில் இரண்டு தசை நார் கிழிந்ததற்கு உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றது.

Also Read | "எது, இந்த பைக்லயா பால் வியாபாரம் பண்றாரு?".. போட்டோவை பாத்து திகைச்சு போய் கெடக்கும் நெட்டிசன்கள்!!

CRICKET, RISHABH PANT, ACCIDENT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்