"ஒட்டு மொத்தத்துல இது 'ரொம்ப' மோசமான ரெக்கார்ட்..." 'அதிர்ச்சி' அளித்த ரிஷப் பண்ட்... 'கழுவி' ஊற்றும் 'நெட்டிசன்கள்'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் இன்று ஆரம்பிக்கப்பட்டது.

இதன் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்டீவ் ஸ்மித் 31 ரன்களுடனும், மார்னஸ் 67 ரன்களுடனும் அவுட்டாகாமல் களத்தில் உள்ளனர். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அறிமுக வீரர் வில் புகோவஸ்கி 62 ரன்கள் குவித்து அவுட்டானார். ஆனால், அவர் கொடுத்த இரண்டு கேட்ச் வாய்ப்புகளை இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தவற விட்டிருந்தார். அதுவும் மூன்று ஓவர்கள் இடைவெளியில் இந்த கேட்ச்களை அவர் தவற விட்டிருந்தார்.

இந்த வாய்ப்பைக் பயன்படுத்திக் கொண்டு அருமையாக விளையாடிய வில் புகோவஸ்கி, அரைசதமடித்து  அசத்தினார். ரிஷப் பண்ட் இரண்டு கேட்ச்களை தவற விட்டதால் அது இந்திய ரசிகர்களிடையே கடும் வெறுப்பை சம்பாதித்து இருந்தது. இதனால், நெட்டிசன்கள் அவரை அதிகமாக மீம்ஸ்கள் மூலம் கலாய்த்துத் தள்ளினர். ரிஷப் பண்ட் சஹாவை விட சிறப்பாக பேட்டிங் செய்வதால் அவருக்கு இரண்டாவது டெஸ்ட் போட்டி முதல் அணியில் இடம் கிடைத்திருந்தது.

இந்நிலையில், கிடைத்த நல்ல வாய்ப்புகளை அவர் தவறவிட்டது ஆஸ்திரேலிய அணிக்கு ரன் குவிக்க மிகப்பெரும் வாய்ப்பாக அமைந்தது. இதனையடுத்து, ரிஷப் பண்ட் குறித்த புள்ளி விவரம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, 2018 ஆம் ஆண்டு முதல் சராசரியாக ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக கேட்ச்களை தவற விட்ட மோசமான சாதனையை அவர் படைத்துள்ளார்.

2018 ஆம் ஆண்டில் ரிஷப் பண்ட் அறிமுகமான நிலையில், அதன் பிறகு குறைந்தது 10 டெஸ்ட் போட்டிகள் ஆடிய விக்கெட் கீப்பர்களை எடுத்துக் கொண்டால் ஒரு போட்டிக்கு 0.86 கேட்ச்களை தவற விட்டு முதல் இடத்தில் ரிஷப் பண்ட் இருக்கிறார். இதனால், ரசிகர்கள் அவர் மீது இன்னும் அதிகமான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்