VIDEO: ‘வாயை மூடிட்டு நில்லுய்யா’!.. தேவையில்லாமல் வாயைக் கொடுத்து ‘பல்பு’ வாங்கிய பந்த்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தென் ஆப்பிரிக்க வீரரிடம் வாயைக் கொடுத்து தேவையில்லாமல் பல்பு வாங்கிய ரிஷப் பந்தின் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தங்களது முதல் இன்னிங்ஸில் 202 ரன்களும், 2-வது இன்னிங்சில் 266 ரன்கள் எடுத்தது. அதேபோல் தென் ஆப்பிரிக்கா அணி தங்களது முதல் இன்னிங்ஸில் 229 ரன்களை எடுத்தது. அதனால் 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி விளையாடி வருகிறது.

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க வீரர் வன் டீர் துஷனிடம் ரிஷப் பந்த் பல்பு வாங்கிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்தபோது ஷர்துல் தாகூர் வீசிய ஓவரில் தென் ஆப்பிரிக்க வீரர்  வன் டீர் துஷன் அடித்த பந்து, இன்சைடு எட்ஜாகி விக்கெட் கீப்பர் ரிஷப் பந்திடம் கேட்ச் ஆனது. அவரும் அவுட் என நினைத்து உடனே பெவிலியன் திரும்பினார்.

ஆனால் அதன்பிறகு ரீப்ளேவில் பார்த்தபோது ரிஷப் பந்தின் கைக்கு பந்து வருவதற்கு முன் ஒருமுறை கிரவுண்டில் பட்டு வந்தது தெரியவந்தது. ஜூம் செய்து பார்த்தபோதுதான் இது தெரிய வந்தது. அதனால் ரிஷப் பந்த் இதை கவனித்திருக்க இருக்க வாய்ப்பு இல்லை. அப்போது வர்ணனை செய்து கொண்டிருந்த இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், ‘வன் டீர் துஷன் இதை கவனித்து ரிவியூ எடுத்திருக்க வேண்டும். அது அவரது தவறுதான்’ என கூறினார்.

இந்த நிலையில் இந்திய அணி தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்தபோது ரிஷப் பந்த் களமிறங்கினார். அப்போது ஃபீல்டிங் செய்துக்கொண்டிருந்த வன் டீர் துஷன், தனது அவுட் சர்ச்சை குறித்து ரிஷப் பந்தை கிண்டல் செய்தார். அதில், ரிஷப் அது கேட்ச் இல்லை என்று உங்களுக்கு தெரியும் தானே. பொய் சொல்லி விட்டீர்களா?’ என கிண்டல் அடித்தார். இதனால் கோபமான ரிஷப் பந்த், ‘வாயை மூடிக்கொண்டு நில்லு’ என அவரை கூறினார். இவர்கள் இருவரும் பேசியது ஸ்டம் மைக்கில் அப்படியே பதிவானது.

ஆனால் அந்த ஓவரிலேயே ரிஷப் பந்த் அவுட்டாகி வெளியேறினார். மொத்தம் 3 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இதனால் தென் ஆப்பிரிக்க வீரர்கள் வழக்கத்தை விட உற்சாகமாக கத்தினர்.

RISHABHPANT, INDVSA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்