“அவர் அப்படியே தோனி மாதிரி”.. DC கேப்டன், கோச், முன்னாள் CSK வீரரை தாறுமாறாக புகழ்ந்த இளம் வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த், தோனி போல் உதவி செய்வதாக குல்தீப் யாதவ் புகழ்ந்து பேசியுள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | கிரக பிரவேசம் முடிஞ்சு 2 நாள்தான் ஆச்சு.. புதுவீட்டுக்கு குடிபுகுந்த தம்பதிக்கு நேர்ந்த சோகம்..!

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இந்த நிலையில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த், தோனியை போல் ஆதரவாக இருப்பதாக குல்தீப் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய குல்தீப் யாதவ், ‘சுழற்பந்து வீச்சாளர்களின் வெற்றியில் விக்கெட் கீப்பர்களுக்கு முக்கியப் பங்கு உள்ளது. அந்த வகையில் ஆரம்ப காலத்தில் தோனி எனக்கு எவ்வாறு உதவினாரோ அதபோல் தற்போது ரிஷப் பந்த் என்னை சரியான முறையில் வழி நடத்துகிறார். உரிய நேரத்தில் நல்ல ஆலோசனை வழங்குவார். எங்களுக்குள் நல்ல புரிதல் உள்ளது. ஸ்டம்புக்கு பின்னால் நின்று தேவையான ஆலோசனை வழங்குகிறார். அவர் களத்தில் மிகவும் கூலாக செயல்படுகிறார். தோனியை போல் சரியான திசையில் அவர் வழி நடத்தி வருகிறார்’ என அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய குல்தீப் யாதவ், ‘அதேபோல் துணை பயிற்சியாளர் ஷேன் வாட்சனும் எனக்கு உதவினார். இருவரும் பயிற்சியின்போது வெளிப்படையாக பேசிக்கொள்வோம். மனதளவில் போட்டிக்கு தயாராவது குறித்து வாட்சன் எனக்கு அறிவுரை வழங்கினார். தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் உடன் முதல்முறையாக பேசிய போது, உன் பவுலிங் நன்றாக உள்ளது,14 லீக் போட்டியிலும் சிறப்பாக விளையாட வேண்டும் என கூறினார். இது எனது தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்தது. டெல்லி அணி நிர்வாகமும் வீரர்கள் தங்களது உணர்வுகளை சுதந்திரமாக வெளிப்படுத்தும் உரிமையை வழங்கியுள்ளது. அதனால் ஒவ்வொரு போட்டியிலும் தன்னம்பிக்கையுடன் விளையாடுகிறேன்’ என்று கூறினார். இதில் ஷேன் வாட்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியுள்ளார்.

கடந்த ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த குல்தீப் யாதவ், பயிற்சியின்போது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார். இதனை அடுத்து நடந்த மெகா ஏலத்தில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி 2 கோடிக்கு அவரை வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

CRICKET, RISHABH PANT, KULDEEP YADAV, MS DHONI, DC CAPTAIN RISHABH PANT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்