ரிஷப் பண்ட் உடல்நிலை எப்படி இருக்கு? அறுவைச் சிகிச்சை குறித்து BCCI & மும்பை மருத்துவமனை வெளியிட்ட தகவல்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ரிஷப் பண்ட் உடல்நிலை & அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மும்பை மருத்துவமனை & பிசிசிஐ சில தகவல்களை பகிர்ந்துள்ளனர்.

Advertising
>
Advertising

கடந்த மாதம் பங்களாதேஷுக்கு எதிரான தொடரை 2-0 என கைப்பற்றிய இந்திய டெஸ்ட் அணியில் ரிஷப் இடம் பெற்றிருந்தார். தற்போது நடந்து வரும் இலங்கைக்கு எதிரான போட்டிகளுக்கான இருபது20 மற்றும் ஒருநாள் அணியில் அவர் காயம் காரணமாக இடம் பெறவில்லை.

இடது கை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இதுவரை 33 டெஸ்ட் போட்டிகளில் 5 சதங்கள் மற்றும் 11 அரை சதங்களுடன் 2,271 ரன்கள் எடுத்துள்ளார். அவர் 30 ODI மற்றும் 66 T20I போட்டிகளில்  முறையே 865 மற்றும் 987 ரன்கள் எடுத்துள்ளார்.

உத்தரகண்ட் மாநிலம் ரூர்க்கி அருகே கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலையில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட், கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்,

விபத்தில் பலத்த காயமடைந்த அவர் உடனடி சிகிச்சைக்கு  சக்ஷாம் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் உயர் சிகிச்சைக்கு டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அன்று மேக்ஸ் மருத்துவமனை சார்பில் தலைமை மருத்துவர் ஆஷிஷ் யாக்னிக் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.

அந்த பேட்டியில் முதல் கட்ட சிகிச்சையில் கிரிக்கெட் வீரர் ரிஷப்புக்கு கடுமையான காயங்கள் எதுவும் இல்லை என்றும் அவர் நிலையாக இருப்பதாகவும் கூறினார், மேலும் "ரிஷப் மருத்துவர்கள் மதிப்பீட்டில் உள்ளார் மற்றும் மருத்துவர்கள் குழு அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறது. சில சோதனைகளுக்குப் பிறகுதான் இன்னும் சொல்ல முடியும். தற்போது அவர் நிலையாக இருக்கிறார், கவலைப்பட ஒன்றுமில்லை. டாக்டர்கள் குழு அவருடன் பேசி, காயங்கள் குறித்து அவர் எங்களிடம் கூறுவதன் அடிப்படையில், அவர் மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறார். முதல் பார்வையில், கடுமையான காயங்கள் எதுவும் இல்லை. எலும்பியல் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்,” என்று யாக்னிக் கூறியிருந்தார்.

ஹரித்வார் மாவட்டத்தின் மங்களூர் நகரில் உள்ள முகமதுபூர் ஜாட் என்ற இடத்தில் இந்த கார் விபத்து நிகழ்ந்துள்ளது.

இச்சூழலில் சில நாட்களுக்கு முன் ரிஷப் பண்ட், மும்பை கோகிலாபென் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முட்டியில் ஏற்பட்ட தசைநார் கிழிவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்று பிசிசிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கணுக்கால் தசை நார் கிழிவுக்கு அறுவை சிகிச்சை இன்னொரு அறுவை சிகிச்சையும் நடந்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அறுவை சிகிச்சை 3 மணிநேரம் நடந்தது என்று கூறப்படுகிறது. மருத்துவர் டின்சா பார்டிவாலா இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டார்.

தசைநார் கிழிவு சரியாக 8-9 மாதங்கள் ஆகும் என்று மருத்துவர் என டின்சா பார்டிவாலா கூறியுள்ளார்.

RISHABH PANT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்