தெரிஞ்சு தான் 'இறக்கி' விட்டாரா?.. விட்டுக்கொடுத்த கோலி.. 'டக்-அவுட்' ஆகி வெளியேறிய வீரர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான 3-வது டி20 போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்ய, இந்திய அணியின் ஓபனர்களாக ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் இருவரும் களமிறங்கினர்.

தொடக்கம் முதலே ரோஹித், ராகுல் இருவரும் அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர். இவர்களின் அதிரடி பேட்டிங்கால் 8 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 100 ரன்களை கடந்தது. 'சிக்ஸர் மன்னன்' என புகழப்படும் ரோஹித் சர்மா இந்த போட்டியில் தன்னுடைய 400-வது சர்வதேச சிக்ஸரை அடித்தார். இதன் மூலம் உலகளவில் 400 சிக்ஸர்கள் கடந்த முதல் இந்தியர் என்ற பெருமை அவருக்கு கிடைத்து இருக்கிறது.

தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா 11.5 ஓவரில் 71 ரன்கள் எடுத்தபோது வில்லியம்ஸ் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதைத்தொடர்ந்து கேப்டன் விராட் கோலி இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்றும் எதிர்பாராதவிதமாக கோலி, ரிஷப் பண்டிற்கு தன்னுடைய இடத்தை விட்டுக்கொடுத்து அவரை 3-வது வீரராக களமிறக்கினார்.

ஆனால் கிடைத்த வாய்ப்பை பண்ட் பயன்படுத்தி கொள்ளவில்லை. பொல்லார்ட் பந்துவீச்சில் பண்ட் டக்-அவுட் ஆகி வெளியேறி விட்டார். பண்டைத் தொடர்ந்து கே.எல்.ராகுல் 91 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நிக்கோலஸ் பூரன் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 4-வது வீரராக இறங்கிய கோலி 29 பந்துகளில் 70 ரன்கள் குவித்தார். 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்தியா 240  ரன்கள் குவித்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்