"அடுத்த 'கேப்டன்' இவரு தான் போல!.." 'பிசிசிஐ' போடும் 'மாஸ்டர்' பிளான்??.. அடித்துச் சொல்லும் 'முன்னாள்' வீரர்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி (Virat Kohli), மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும், சிறந்த கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
தோனிக்கு பிறகு, கோலியின் தலைமையிலான இந்திய அணி, மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. தனது ஆக்ரோஷ வெளிப்பாடு, மற்ற வீரர்களை சிறப்பாக ஊக்குவிப்பது என சிறந்த ஒரு கேப்டனாக கோலி, கிரிக்கெட் அரங்கில் வலம் வருகிறார்.
ஆனால், அதே வேளையில், அவருக்கு அடுத்தபடியாக இந்திய அணியை யார் வழி நடத்துவார் என்ற கேள்வியும், சமீப காலமாக அதிகம் எழுந்து வருகிறது. மேலும், ஐபிஎல் போட்டிகளில் கோலியை விட ரோஹித் சிறந்த கேப்டனாக வலம் வருவதால், டி 20 போட்டிகளில் மட்டும் ரோஹித்தை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்றும், இனிவரும் காலங்களில், கோலியின் சுமையைக் குறைப்பதற்காக, தனி தனி கேப்டன்களை நியமிக்க வேண்டும் என்றும் பலர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சல்மான் பட் (Salman Butt), இதுகுறித்து சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். 'ரிஷப் பண்ட்டின் உள்ளூர் போட்டிகள் குறித்து அவ்வளவாக எதுவும் எனக்கு தெரியாது. ஆனால், ஐபிஎல் தொடரில் அவரின் ஆட்டத்தை பார்த்துள்ளேன். டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளதால், இந்திய அணியின் எதிர்காலத் திட்டங்களை, நிச்சயமாக அவரை வைத்து, பிசிசிஐ வகுத்திருக்கும். கோலி தற்போதும் இளமையாக இருப்பதால், இன்னும் 8 - 9 ஆண்டுகள் வரை அவர் ஆடுவார்' என சல்மான் பட் தெரிவித்துள்ளார்.
இந்தாண்டு, பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ரிஷப் பண்ட் (Rishabh Pant), மிகச் சிறப்பாக அணியை தலைமை தாங்கி வருகிறார். மேலும், இதுவரை நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில், டெல்லி அணி தான் புள்ளிப் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.
ரிஷப் பண்ட் குறித்து பேசிய சல்மான், ரோஹித் மற்றும் ரஹானேவின் கேப்டன்சி பண்புகளையும் பாராட்டிப் பேசியுள்ளார். 'ரோஹித் ஷர்மாவை ஒரு கேப்டனாக எனக்கு மிகவும் பிடிக்கும். இக்கட்டான சூழல்களை கூட மிகச் சிறப்பாக கையாள்வார்.
அதே போல, ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் கோலி இல்லாத நேரத்தில் தலைமை தாங்கிய ரஹானே, இந்திய அணிக்கு சிறப்பான வெற்றியைத் தேடிக் கொடுத்தார். ஒரு கேப்டனாக, ரஹானே எடுத்த முடிவுகள் தெளிவாக இருந்தது' என இந்திய அணியின் அடுத்த கேப்டனாக வாய்ப்புள்ளவர்கள் பற்றி சல்மான் பட், தனக்கு தோன்றிய கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "'கோலி', 'ரோஹித்'த எல்ல்லாம் உங்களால் ஒண்ணும் பண்ண முடியாது.. சும்மா பேசணுமேன்னு பேசாதீங்க.." 'அமீரை' தாறுமாறாக கிழித்த 'முன்னாள்' வீரர்!!
- "நிச்சயம் அவரு கொஞ்சம் தடுமாற தான் போறாரு.. ஆனா, அவரு பண்ண வேண்டியது இது மட்டும் தான்.." 'ஹிட்மேனுக்கு' செம 'ஐடியா' கொடுத்த 'கோச்'!!
- "இந்த விஷயத்துல 'ரோஹித்' ரொம்ப கெட்டிக்காரரு.. அவரு இருந்தாலே எங்களுக்கு 'பிரச்சன' இருக்காது.." பாராட்டித் தள்ளிய 'ஷமி'!!
- "அவரை அவுட் எடுக்குறது ரொம்ப 'ஈஸி'.. 2 'Trick' மட்டும் போதும்.." 'ரோஹித்'தை திணறடிக்க, 'அமீர்' சொல்லும் 'ரகசியம்'!!
- "சும்மா இருந்தவங்கள நோண்டுனா இது தான் நடக்கும்.." 'இந்திய' ரசிகர்களை வம்பிழுத்த 'வீடியோ'.. தாறுமாறாக 'பதிலடி' கொடுத்த ரசிகர்கள்!!
- "மொத்தமா ஒடஞ்சு போயி உக்காந்து இருந்தேன்.. அப்போ, 'கோலி' தான் எனக்கு 'தைரியம்' குடுத்தாரு.. அவரு மட்டும் இல்லன்னா.." நெகிழ்ந்து போன 'இளம்' வீரர்!!
- "'தோனி'ய அவுட் பண்ணது ஒரு சின்ன 'ஐடியா' வெச்சு தான்.." 'ரிஷப் பண்ட்' போட்ட 'மாஸ்டர்' பிளான்.. 'இளம்' வீரர் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!!
- "பண்றத எல்லாம் பண்ணிட்டு சிரிப்ப பாரு.." 'பிரித்வி ஷா' செயலால் பயந்த 'ரிஷப் பண்ட்'.. ஜஸ்ட் மிஸ் ஆயிடுச்சு'ங்கோ.. 'வைரல்' வீடியோ!!
- "ஊரே Birthday'க்கு 'வாழ்த்து' சொன்னாலும், மனைவியோட 'wish'னா எப்பவும் 'ஸ்பெஷல்' தானே.." 'காதலில்' உருகி அன்பு 'மனைவி' போட்ட 'Post'.. இணையத்தில் இப்போ செம 'வைரல்'!!
- "அட, என்னய்யா நீங்க.. முக்கியமான நேரத்துல இப்டி ஒரு தப்ப தான் பண்ணுவீங்களா??.. எல்லாம் வேஸ்ட்டா போச்சுல்ல.." 'டெல்லி' அணியை விமர்சித்த 'ஆகாஷ் சோப்ரா'!!