"ப்பா, 'சின்ன' வயசுல இப்படி எல்லாம் இருந்து இருக்காரா??.." 'ரிஷப் பண்ட்'டின் மறுபக்கம் இது தான்.. சிறுவயது 'கோச்' சொன்ன 'விஷயம்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளிடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி, ஜூன் மாதம் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை, இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதற்காக, தற்போதே கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருந்து வரும் நிலையில், இந்திய வீரர்கள் சிலரின் ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பும் மறுபக்கம் எழுந்துள்ளது. அதிலும் குறிப்பாக, இளம் வீரரான ரிஷப் பண்ட் (Rishabh Pant), சமீப காலங்களில் இந்திய அணிக்காக அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் மிகச் சிறப்பாக ஆடி வருகிறார். பேட்டிங், கீப்பிங் என அசத்தி வந்த ரிஷப் பண்ட், ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வழிநடத்தியது முதல், தன்னிடம் சிறந்த கேப்டன்சி பண்புகள் உள்ளதையும் நிரூபித்துள்ளார்.
அது மட்டுமில்லாமல், தோனியிடம் உள்ள சிறந்த கேப்டன் பண்புகள், ரிஷப் பண்ட்டிடமும் இருப்பதாக கூறி, அவரை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இதனால், வரவிருக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலும், ரிஷப் பண்ட் மீதான நம்பிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவரது சிறுவயது பயிற்சியாளர் தாரக் சின்ஹா (Tarak Sinha), சிறு வயதில் மிகவும் பாசத்துடன் பண்ட் செய்த காரியம் ஒன்று பற்றி, தற்போது பகிர்ந்துள்ளார்.
'டெல்லியிலுள்ள சன்னட் கிளப்பில் பயிற்சி மேற்கொண்ட போது, ஒருமுறை நான் அவரிடம் கோபப்பட்டு விட்டேன். எனது செயலால் வருத்தப்பட்ட ரிஷப் பண்ட், அன்றிரவு முழுவதும் ஒழுங்காக தூங்கவில்லை. தொடர்ந்து, இரவு 3:30 மணிக்கு எனது வீட்டின் கதவைத் தட்டினார். அந்த சமயத்தில், சுமார் ஒரு மணி நேரம் பயணம் செய்து எனது வீட்டிற்கு வந்தார். நான் ரிஷப் பண்ட்டிடம், "இந்த சமயத்தில் எதற்கு இவ்வளவு தூரம் பயணம் செய்து வந்தாய்?" என கேட்டேன்.
நீங்கள் இதுவரை கோபத்துடன் இருந்து நான் பார்த்ததில்லை என்றும், அதற்காக என்னை மன்னித்து விடுங்கள் என்றும் பண்ட் பதிலளித்தார். அந்த சம்பவம் மனதிற்கு சற்று நெருக்கமாக இருந்தாலும், நள்ளிரவுக்கு பின் அவர் அப்படி ஒரு பயணம் மேற்கொண்டு வந்ததால், ஒரு பக்கம் சற்று தொந்தரவாகவும் என் மனதில் பட்டது.
எனது குடும்பத்தினர் கூட, "குழந்தைகளிடம் ஏன் இவ்வளவு கடுமையாக நடந்து கொள்கிறீர்கள்?" என கேட்டு வருத்தப்பட்டனர்' என சின்ஹா தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "அவருகிட்ட 'தோனி' மாதிரி 'திறமை' எல்லாம் இருக்கு.. அதுக்குன்னு இப்போவே தூக்கி வெச்சு பேசுறது மட்டும் வேணாம்.." கறாராக சொன்ன 'முன்னாள்' வீரர்!!
- "எனக்கு 'டெஸ்ட்' மேட்சே புடிக்காது.. ஆனா, இவரு 'பேட்டிங்' பண்ண வந்தா மட்டும்.. அத ரொம்ப 'enjoy' பண்ணி பாப்பேன்.." 'இந்திய' வீரருக்கு கிடைத்த வேற லெவல் 'பாராட்டு'!!
- "அடுத்த 'கேப்டன்' இவரு தான் போல!.." 'பிசிசிஐ' போடும் 'மாஸ்டர்' பிளான்??.. அடித்துச் சொல்லும் 'முன்னாள்' வீரர்!!
- என்னங்க நடக்குது?.. அவர விட அதிக திறமை யாருக்கு இருக்கு?.. நண்பனுக்காக குரல் கொடுத்த அசாருதீன்!.. முடிவுக்கு வருமா சர்ச்சை?
- 'செம்ம கில்லாடிங்க அவரு!.. எங்க வித்தைய வச்சு... எங்களுக்கே தண்ணி காட்டுறாரு'!.. டிராவிட் 'மாஸ்டர் ப்ளான்'!.. அலறும் சீனியர்ஸ்!!
- "சும்மா இருந்தவங்கள நோண்டுனா இது தான் நடக்கும்.." 'இந்திய' ரசிகர்களை வம்பிழுத்த 'வீடியோ'.. தாறுமாறாக 'பதிலடி' கொடுத்த ரசிகர்கள்!!
- "'தோனி'ய அவுட் பண்ணது ஒரு சின்ன 'ஐடியா' வெச்சு தான்.." 'ரிஷப் பண்ட்' போட்ட 'மாஸ்டர்' பிளான்.. 'இளம்' வீரர் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!!
- "பண்றத எல்லாம் பண்ணிட்டு சிரிப்ப பாரு.." 'பிரித்வி ஷா' செயலால் பயந்த 'ரிஷப் பண்ட்'.. ஜஸ்ட் மிஸ் ஆயிடுச்சு'ங்கோ.. 'வைரல்' வீடியோ!!
- "அட, என்னய்யா நீங்க.. முக்கியமான நேரத்துல இப்டி ஒரு தப்ப தான் பண்ணுவீங்களா??.. எல்லாம் வேஸ்ட்டா போச்சுல்ல.." 'டெல்லி' அணியை விமர்சித்த 'ஆகாஷ் சோப்ரா'!!
- "இதுல ஒரு டீம் தான்பா இந்த தடவ 'சாம்பியன்' ஆகப் போறாங்க.." சூசகமாக 'ரவி சாஸ்திரி' போட்ட 'ட்வீட்'.. கேள்வியை எழுப்பிய 'ரசிகர்கள்'!!