'இது' டெல்லி அணிக்கு மிகப்பெரிய சிக்கல்!.. ஸ்ரேயாஸ் இல்லாத குறையை... பண்ட் 'இந்த' இடத்தில் தீர்க்கவே முடியாது!.. தடுமாறும் அணி நிர்வாகம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுரிஷப் பண்ட் டெல்லி அணிக்கு கேப்டனாகியுள்ள நிலையில் அந்த அணிக்கு தடுமாற்றம் இருக்கும் என முன்னாள் வீரர் தெரிவித்துள்ளர்.
டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், இங்கிலாந்து தொடரின் போது காயத்தால் பாதிக்கப்பட்டார். இதனால் புதிய கேப்டனாக ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் டெல்லி அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் இல்லாததால் என்னென்ன பிரச்னை இருக்கும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.
டெல்லி அணியின் கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் ஐயருக்கு இங்கிலாந்து அணியுடனான முதல் ஒருநாள் போட்டியின்போது இடதுகையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பின்னர் 3 - 4 மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்பதால் வரும் ஐபிஎல் தொடரில் இருந்து முழுவதுமாக விலகினார்.
ஸ்ரேயாஸ் ஐயர் இல்லாததால் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு புதிய கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என குழப்பம் ஏற்பட்டது. இந்த ரேசில் ஸ்டீவ் ஸ்மித், அஸ்வின், ரிஷப் பண்ட்-ன் பெயர்கள் இருந்தன. இறுதியில் ரிஷப் பண்ட் தான் டெல்லி அணியின் கேப்டன் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்காக பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். டெல்லி அணி தனது முதல் போட்டியாக வரும் ஏப்.10ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இந்நிலையில், டெல்லி அணி, ஸ்ரேயாஸ் ஐயரின் வழிநடுத்தி செல்லும் திறமையையும் மிஸ் செய்யும் என்றும், மிடில் ஆர்டரில் நிலையான தன்மையின்றி அணி தடுமாற்றத்தை ஏதிர்கொள்ளும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், டெல்லி அணிக்கு கடந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி பெரும் பிரச்னையாக இருந்தது. 4 போட்டிகளில் எதிர்கொண்டு 4 போட்டியிலும் டெல்லி தோற்றது. அதை இந்தாண்டு சரி செய்ய வேண்டும். ஆனால், அதற்கு ஸ்ரேயாஸ் இல்லை என தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு டெல்லி அணிக்கு மிகப்பெரும் பிரச்னையாக இருந்தது பவர்ப்ளேவில் தொடக்க வீரர்கள் அதிரடி காட்ட தவறியதுதான். எனவே, இந்த முறை ஸ்ரேயாஸும் இல்லாததால், தவான், ஸ்மித், ரஹானே, பிரித்வி ஷா யாரேனும் ஒருவர் தொடக்கம் முதலே அதிரடி காட்டி ஆட வேண்டும் என பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.
மேலும், மற்றபடி பவுலிங்கில் வழக்கம்போல் அக் ஷர் பட்டேல், அஷ்வின், ரபாடா, ஆகியோர் உள்ளனர். கடந்த முறை பவுலிங் பலமாக இருந்ததால் தான் இறுதிப்போட்டி வரை வந்தது எனவும் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இது' மட்டும் நடந்துச்சுனா... போட்டியில் விளையாட தடை!!.. ஐபிஎல் அணி கேப்டன்களுக்கு வேட்டு வைத்த பிசிசிஐ!.. பீதியில் மற்ற வீரர்கள்!.. ஏன் இந்த அதிரடி?
- ‘இன்னும் ஐபிஎல் ஆரம்பிக்கவே இல்ல, அதுக்குள்ள இப்படியொரு சோதனையா’!.. ஆல்ரவுண்டர் எடுத்த திடீர் முடிவு.. என்ன செய்யப்போகிறது SRH?
- 'அவங்கள எல்லாம் ஒன்னும் பண்ண முடியாதுங்க'!.. 'செம்ம ஃபார்ம்ல இருக்காங்க... செஞ்சி விட்ருவாங்க'!.. 'அப்படியா!.. ஒரு கை பார்த்திடுவோம்'!!
- ஹோட்டல்ல ‘WiFi’ சரியாக வரலைன்னு ட்வீட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் வீரர்.. அதுக்கு ‘அஸ்வின்’ கொடுத்த கலக்கல் பதில்..!
- புது ஜெர்சி... புது வீரர்கள்... இந்த IPL-இல் சிஎஸ்கேவின் 'கேம்' எப்படி இருக்கும்?.. மாஸ்டர் பட விஜய் பாணியில்... தல தோனியின் 'பலே' திட்டம்!
- 'அவருக்கு சரியான கிரிக்கெட் மூளை...' 'அவரு பந்த ஃபேஸ் பண்றதே வித்தியாசமா இருக்கும்...' - இந்திய வீரரை புகழ்ந்து தள்ளிய கிறிஸ் மோரீஸ்...!
- டெல்லி அணியின் புதிய 'ரூட் தல' பண்ட் குறித்து... நம்ம 'சின்ன தல' சொன்ன செம்ம நியூஸ்!.. டெல்லி கேபிடல்ஸ் வியூகம் 'இது' தான்!
- ‘ஹோட்டல் ரூம்ல WiFi சரியா கிடைக்கல’!.. ரசிகர்களிடம் ஒரு ஆலோசனை கேட்ட, முன்னாள் CSK வீரரும், இன்னாள் DC வீரருமான விக்கெட் கீப்பர்..!
- முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரை கற்களால் தாக்கிய மர்ம நபர்கள்.. தேர்தல் பிரச்சாரத்தின் போது நடந்த அதிர்ச்சி..!
- 'ஏங்க... ஏன் இப்படி?.. இப்ப தான நல்லா போயிட்டிருக்கு'!.. 'கோலி கேப்டன்சிய ரோகித் கிட்ட கொடுக்கணுமா'?... மீண்டும் கிளம்பிய சர்ச்சை!.. செம்ம பதிலடி!!