'வென்றது வெஸ்ட் இண்டீஸ்!'.. 'தோனிக்கு மட்டும் இல்ல.. பண்ட்-க்கும் கத்துவோம்!' சிலிர்க்க வைத்த சேப்பாக்கம் ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சென்னை சேப்பாக்கத்தில் இன்று நிகழுக் இந்தியா - வெஸ்ட் இண்டிஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டியில் முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டிஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதில் 8 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 287 ரன்கள் எடுத்தது.

தொடக்கத்தில் களமிறங்கிய கே.எல்.ராகுல் 6 ரன்களுக்கும், கோலி 4 ரன்களுக்கும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ரோஹித் சர்மா 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.  இப்படியாக 80 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறிக் கொண்டிருந்தபோது களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் ரிஷப் பண்ட் களமிறங்கினர்.

இதில் ஸ்ரேயாஸ் அய்யர் 71 ரன்களும், ரிஷப் பண்ட் 70 ரன்களும் அடித்து விளாசினர். இதில் ரிஷப் பண்ட் தோனியைப் போலவே ஹெலிகாப்டர் ஷாட்டினை முயற்சி செய்து அடித்தபோது, அரங்கில் இருந்து தோனியின் சென்னை ரசிகர்கள் பண்ட் பெயரைச் சொல்லி உற்சாக கோஷமிட்டனர். அதிலும் சிலர், சென்னை தோனி ரசிகர்களின் வாழ்த்துக்களைக் கூறி கட்-அவுட் வைத்திருந்தனர்.

எனினும் இப்போட்டியின் இறுதியில், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 291 ரன்கள் எடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி வாகை சூடியது. ஷாய் ஹோப்ஸின் பார்ட்னர்ஷிப்பில் ஆடிய வெஸ்ட் இண்டீஸின் ஹெட்மியர் 106 பந்துகளில் 139 ரன்கள் அடித்து ஒரு நாள் போட்டிகளில் தனது அதிகபட்ச ஸ்கோரினை நிலைநாட்டினார். 

WIVIND, CHEPAUK, RISHABPANT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்