“என் ஏரியாவுக்குள்ள மட்டும் பிட்ச் ஆச்சுன்னா..” - ஆஸ்திரேலியாவில் நேதன் லயனை எதிர்கொண்டது எப்படி? - ‘வீரர்’ சொன்ன சீக்ரெட்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பிரிஸ்பன் டெஸ்ட் போட்டி பற்றி ஆட்ட நாயகன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். அதன்படி, இந்த போட்டியில் டிரா என்பது இரண்டாம் பட்சம்தான் என்றும், வெற்றி பெறுவதுதான் முதன்மையான குறிக்கோள் என்றும் தெரிவித்த ரிஷப் பந்த், வெற்று பெறுவதை நோக்கியே ஆடினோம் என்று தெரிவித்துள்ளார். 

முன்னதாக சிட்னியில் 97 ரன்கள் எடுத்து 406 ரன்கள் எனும் இலக்கை விரட்டி விடுவோம் என்று ஆஸி.யை தனது அபாரா பந்துவீச்சால் மிரட்டினார் ரிஷப் பந்த். இதேபோல் பிரிஸ்பனில் 328 ரன்கள் எனும் இலக்கை அதைவிட அபாரமாக விரட்டி தமது இன்னிங்சை சிறப்பாக ஆடினார். அத்துடன் 89 நாட் அவுட் என்கிற வரலாற்று வெற்றியையும் பெற்றார்.

இந்நிலையில் தான் ஸ்போர்ட்ஸ் டுடேவில் போரியா மஜும்தாரிடம் பேசும்போது, “நார்மல் கிரிக்கெட்டை ஆடும் மனநிலையிலேயே முதல் இன்னிங்ஸில் தளர்வான பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி ரன் ஸ்கோரில் கவனம் செலுத்தினோம். அணி நிர்வாகமும் அதையே வலியுறுத்தியது. பிரிஸ்பனைப் பொறுத்தவரை டிரா என்பது இரண்டாம் பட்சம் தான். முதலில் இருந்தே வெல்வதையே குறிக்கோளாக கொண்டிருந்தோம்.

நேதன் லயன் பவுலிங்கை எதிர்கொள்வதை பற்றி சொல்ல வேண்டுமானால், அதிகமாகத் திரும்பும் பந்தை ஆடாமல் விட்டுவிடலாம். எனினும் பெரிதாக திரும்பாத சமயத்தில் ஷாட் ஆடப்போய் சிக்காமல் இருந்தாலே போதும். இல்லையென்றால் அவுட் ஆகவே வாய்ப்பு அதிகம். லயனின் ஒரு பந்து அப்படி நன்றாகத் திரும்பியது, எனவே அவர் நிச்சயம் அந்தப் பந்தைதான் வீசுவார் என்று கணித்திருந்தேன்.

ALSO READ: “எதையும் மிஸ் பண்ணிடலல?.. போலாம் ரைட்!” ... கார் நகர்ந்ததுக்கு அப்புறம் தான் அந்த ‘ட்விஸ்ட்டே’ காத்திருக்கு! வைரல் வீடியோ!

அதன்படி பந்தை நன்றாகத் தூக்கி வீசி ஸ்டம்புக்கு வெளியே போகுமாறு அவர் திருப்புவார் என்று கணித்ததுடன், அவ்வாறு அவர் செய்தால் மேலேறி அடிப்பது என்று நினைத்தேன். ஆனால் பந்து என் ஏரியாவில் பிட்ச் ஆனால் அதை கிரவுண்டுக்கு வெளியே அடித்து விடுவேன்” என்று ரிஷப் பந்த் தெரிவித்தார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்