‘ஒரு கோடீஸ்வரர் மாதிரி பேட்டிங் பண்ணாரு’!.. ரொம்ப மோசமான ஆட்டம்.. இந்திய வீரரை ‘சரமாரியாக’ விமர்சித்த முன்னாள் வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக இளம்வீரர் ரிஷப் பந்தை இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சனம் செய்துள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, கடந்த 18-ம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் முடிவடைந்தது. இப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி நியூஸிலாந்து அணி கோப்பையை கைப்பற்றியது. இதனால் இந்திய அணி வீரர்கள் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இப்போட்டியை டிரா செய்ய வாய்ப்பிருந்தும், அதை இந்தியா நழுவ விட்டதாக பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் இந்திய பேட்ஸ்மேன்களின் ஆட்டம் ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில், குறிப்பாக ரோஹித் ஷர்மா, புஜாரா, ஜடேஜா போன்ற சீனியர் வீரர்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால் கடைசி நாள் ஆட்டத்தில் 170 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இந்திய அணி இழந்தது.

கடைசி நாள் ஆட்டத்தின் முதல் 10 ஓவர்கள் மிக முக்கியம் என்றும், அதனை சிறப்பாக கையாள வேண்டும் என்றும் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் கூறியிருந்தார். ஆனால் அப்போது களத்தில் இருந்த கேப்டன் விராட் கோலி 13 ரன்களிலும், புஜாரா 15 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இது அடுத்து களமிறங்கிய வீரர்களுக்கு அழுத்தத்தை கொடுத்ததால்தான் இந்தியா தோல்வியை தழுவியதாக சச்சின் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

அதேபோல் இந்திய அணியின் முக்கிய வீரராக கருத்தப்படும் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தும் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். அதிலும் நியூஸிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்களது பந்துவீச்சை எதிர்கொள்ள அவர் சற்று திணறினார். இதனால் முதல் இன்னிங்ஸில் 4 ரன்னிலும், இரண்டாவது இன்னிங்ஸில் 41 ரன்களிலும் அவுட்டாகினார்.

இந்த நிலையில் தனது யூடியூப் சேனலில் பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, ரிஷப் பந்தின் ஆட்டம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதில், ‘இந்த இறுதிப்போட்டியில், ரிஷப் பந்த் ஒரு கோடீஸ்வரரைப் போல பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அவர் மிகவும் நன்றாக பேட்டிங் செய்வதை நாம் பார்த்திருக்கிறோம். சிட்னி டெஸ்ட் போட்டியில் சதமும், ஹப்பா டெஸ்ட் போட்டியில் 89 ரன்கள் எடுத்து நாட் அவுட் ஆகாமல் இருந்தும் அவர் அசத்தினார்.

அதேபோல் இங்கிலாந்துக்கு எதிராக இரண்டு சதங்கள் அடித்திருந்தார். பல மேட்ச் வின்னிங் ஆட்டங்களை அவரிடம் பார்த்திருக்கிறோம். ஆனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அவர் அப்படி ஆடவில்லை’ என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். கடைசி நாள் ஆட்டத்தில் ரிஷப் பந்த் ஆவுட்தான் நியூஸிலாந்து அணிக்கு திருப்புமுனையாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்