முட்டி மோதிய 'பீட்டர்சன்' - 'பாண்டிங்'... "அப்ப நான் வாயை தொறக்கவே கூடாதா?".. காரசாரமாக நடந்த 'விவாதம்'.

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கிரிக்கெட் டெஸ்ட் வரலாற்றில் மிக உயரிய தொடராக பார்க்கப்படுவது ஆஷஸ் டெஸ்ட் தொடர்.

Advertising
>
Advertising

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடர், தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில், முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலிய அணி, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து, இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும், ஆஸ்திரேலியா அணியே வெற்றி பெற்று அசத்தியுள்ளது. இந்த போட்டியிலும், கிட்டத்தட்ட ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்து அணியை நிலைகுலையச் செய்தது. அதிலும் குறிப்பாக, ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் கடுமையாக திணறினர்.

இந்நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன், ஆஸ்திரேலிய வீரர் ஒருவரைக் குறித்து தெரிவித்துள்ள கருத்து, கடும் பரபரப்பை உண்டு பண்ணியது. ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன், முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். இதுபற்றி ட்வீட் செய்த பீட்டர்சன், 'யாராவது ஒருவர் நாதன் லயனின் பந்தினை அடித்து ஆடுங்கள். எந்த வேரியேஷனும் இல்லாமல், ஒரு ஆப் ஸ்பின்னர், ஒரே மாதிரி பந்து வீசுகிறார்' என குறிப்பிட்டிருந்தார்.

 

டெஸ்ட் போட்டியில், 400 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள வீரரை கெவின் பீட்டர்சன் இப்படி தனது ட்வீட்டில் குறிப்பிட்டதால், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங், இதற்கு பதிலடி கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். 'லயனின் ஆப் ஸ்பின் பந்து வீச்சு, மிகச் சிறந்த தரத்திலான ஒன்றாகும். 400 டெஸ்ட் விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியது மட்டுமில்லாமல், உங்களையும் (கெவின் பீட்டர்சன்) 4 முறை டெஸ்ட் போட்டிகளில் ஆட்டமிழக்க செய்துள்ளார்' என கூறியுள்ளார்.

ரிக்கி பாண்டிங் மட்டுமில்லாமல், இன்னும் சில முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்களும், பீட்டர்சனின் கருத்துக்கு பதில் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இதுபற்றி ட்வீட் செய்த பீட்டர்சன், 'லயன் பற்றிய எனது ட்வீட்டிற்கு, மறைமுகமாக ஆஸ்திரேலியர்கள் பதிலளித்தது வினோதமாக உள்ளது. ஒருவர் 400 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் என்பதற்காக அவரைப் பற்றி விமர்சனம் செய்ய ஒருவருக்கு அனுமதி இல்லையா?.. விசித்திரமாக உள்ளது' என தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

 

ஆஷஸ் டெஸ்ட் போட்டிகள் வரும் போது, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணி வீரர்கள் போட்டியின் போது ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடுவதும், முன்னாள் வீரர்கள் இது போன்று எதிர் கருத்துக்களைத் தெரிவிப்பதும் வாடிக்கையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

KEVIN PIETERSEN, RICKY PONTING, ASHES TEST

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்