"என்னங்க நடக்குது இங்க??.." கடுப்பாகி நடுவரிடம் கத்திய ரிக்கி பாண்டிங்.. KKR vs DC மேட்ச் நடுவே நடந்த பரபரப்பு

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

15 ஆவது ஐபிஎல் தொடரில், ஞாயிற்றுகிழமையான நேற்று (10.04.2022), இரண்டு போட்டிகள் நடைபெற்றிருந்தது.

Advertising
>
Advertising

மனிதர்களை போலவே வாய்.. Beach ல கரை ஒதுங்கிய வித்தியாசமான உயிரினம்.. வைரல் புகைப்படம்..!

இதன் முதல் போட்டியில், கொல்கத்தா அணியை டெல்லி அணி வீழ்த்தி இருந்தது. தொடர்ந்து, இரண்டாவது போட்டியில் லக்னோ அணியை வீழ்த்தி, புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது ராஜஸ்தான் அணி.

இதில், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி இருந்த போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா, பந்து வீச்சைத் தேர்வு செய்தது.

வார்னர் - ப்ரித்வி அதிரடி

அதன்படி, பேட்டிங்கை தொடங்கிய டெல்லி அணி, ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டது. அந்த அணியின் தொடக்க வீரர்களான ப்ரித்வி ஷா 51 ரன்களும், வார்னர் 61 ரன்களும் எடுத்திருந்தனர். இறுதியில், ஷர்துல் தாக்கூரும் அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 215 ரன்களை டெல்லி அணி எடுத்திருந்தது.

தொடர்ந்து, கடின இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணி, கடைசி ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் 171 ரன்கள் மட்டும் எடுத்திருந்தது. இதனால், 44 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்று அசத்தி இருந்தது. நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தி, அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த குல்தீப் யாதவ், ஆட்ட நாயகன் விருதினை வென்றிருந்தார்.

கோபப்பட்ட ரிக்கி பாண்டிங்

இதனிடையே, இந்த போட்டியின் போது, டெல்லி அணியின் பயிற்சியாளரும், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரருமான ரிக்கி பாண்டிங், திடீரென நடுவரிடம் கோபப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. டெல்லி அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, 19 ஆவது ஓவரை கொல்கத்தா வீரர் உமேஷ் யாதவ் வீசினார்.

அப்போது தாக்கூர் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் பேட்டிங் செய்து கொண்டிருந்தனர். இந்த சமயத்தில், வெளியே இருந்த ரிக்கி பாண்டிங், திடீரென கையை வைத்து சைகை காட்டி, வெளியே நின்றிருந்த நான்காம் நடுவரிடம் ஏதோ பேச முற்பட்டார். ஆனால், ரிக்கி பாண்டிங் கேள்விக்கு நடுவர் சரியாக பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், நடுவர் அருகே சென்ற பாண்டிங், ஏதோ கோபத்தில் கத்தி பேச ஆரம்பித்தார்.

காரணம் என்ன?

இதற்கான காரணம் என்ன என்பது சரிவர தெரியவில்லை. ஒரு வேளை அந்த சமயத்தில் உமேஷ் போட்ட பந்து, வைடு என்பதற்காக ரிக்கி பாண்டிங் நான்காம் நடுவரிடம் முறையிட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதே போல, பீல்டிங்கை கொல்கத்தா அணி நிறுத்தி இருந்த விதம் பற்றியும் ரிக்கி பாண்டிங் நடுவரிடம் விவாதித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இப்படி சில காரணங்கள் நிலவி வரும் நிலையில், நான்காம் நடுவரிடம் ரிக்கி பாண்டிங் வாக்குவாதம் செய்த வீடியோக்கள், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

“ஜடேஜாவுக்கு பதிலா அவரை தான் CSK கேப்டனா போட்டிருக்கணும்”.. யாரும் யோசிக்காத வீரரை கைகாட்டிய ரவி சாஸ்திரி..!

CRICKET, IPL, UMPIRE, KOLKATA KNIGHT RIDERS, RICKY PONTING, KKR VS DC, IPL 2022

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்