அவரை டீம்ல எடுத்ததுதான் ரொம்ப நல்ல ப்ளான்.. மொத்த அணியும் பாசிட்டிவாக மாத்திட்டாரு.. தாறுமாறாக புகழந்த கோலி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டி20 உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றது குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பகிர்ந்துள்ளார்.

Advertising
>
Advertising

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 210 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மா 74 ரன்களும், கே.எல்.ராகுல் 69 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 35 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புகு 144 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக ஆப்கானிஸ்தான் வீரர் கரீம் ஜனத் 42 ரன்கள் எடுத்தார். இந்திய அணியை பொறுத்தவரை முகம்து ஷமி 3 விக்கெட்டுகளும், அஸ்வின் 2 விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த இந்திய அணி, இப்போட்டியில் வெற்றி பெற்றது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

இந்த நிலையில் போட்டி முடிந்த பின் பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ‘இந்த மைதானம் பேட்டிங் செய்ய ஏதுவாக இருந்தது. ஆரம்பத்தில் பெரிய ஷாட்கள் அடிப்பதன் மூலம் எதிரணியை சுலபமாக நெருக்கடிக்கு உள்ளாக்கி விடலாம். இப்போட்டியில் அதைதான் நாங்கள் செய்தோம். டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை பேட்டிங், பவுலிங் இந்த இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும்’ என கூறினார்.

தொடர்ந்து பேசிய கோலி, ‘அரையிறுதிக்கு நுழைய நெட் ரன்ரேட் தான் எங்களுக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு என்பது தெரியும். அதனால் இனிமேல் கண்டிப்பாக பாசிட்டிவாக விளையாடுவோம். அஸ்வினை ப்ளேயிங் லெவனில் எடுத்ததை நல்ல விஷயமாக பார்க்கிறேன். இவரது வருகை அணிக்கு நல்ல ஊக்கத்தை கொடுத்துள்ளது. ஐபிஎல் தொடரில் அஸ்வின் அபார பந்து வீசியுள்ளார். இப்போட்டியில் மிடில் ஓவர்களில் நன்றாக ரன்களை கட்டுப்படுத்தினார்’ என கூறினார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்