VIDEO: 'பிரச்சனை' பண்ணனும்னு வந்துருக்கீங்கன்னா... 'மொதல்லையே சொல்லிடுங்க...' இதெல்லாம் ஒரு கேள்வியா...? நிருபர் கேட்ட கேள்விக்கு 'ஷாக்' ஆன கோலி...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

போட்டி முடிந்தபின் நிருபர் கேட்ட கேள்விக்கு விராட் கோலி சர்காஸ்டிகாக கூறிய பதில் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.

நேற்றைய டி-20 கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி மோதின. பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. பாகிஸ்தான் வீசிய பந்தால் திக்குமுக்காடியா இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது.

இந்திய அணியின் விராட் கோலி 57 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 39 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். அதன்பின் ரசிகர்கள் அனைவரது கவனமும் ரோஹித் சர்மா மீது தான் திரும்பியது. அவர் ரன்களை சேர்த்தால் மட்டுமே இந்தியா அதிக ரன்கள் எடுக்க வாய்ப்பிருக்கும் என்ற நிலையில் ரோஹித் ஒற்றை இலக்க ரன்களுடன் ஆட்டமிழந்தார்.

இது இந்திய ரசிகர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியது என்று தான் சொல்லவேண்டும். கடைசியாக இந்திய அணி 20 ஓவரில் 151 ரன்களை எடுத்தது. பாகிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக ஷாஹின் அப்ரிடி 3 விக்கெட்டுகளையும், ஹசன் அலி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

அடுத்ததாக காமிறங்கிய பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர்கள் முழு ஆட்டத்தையும் முடித்து வைத்து அபார வெற்றி பெற்றனர். பாபர் அசாம் 68 ரன்களுடனும், ரிஸ்வான் 79 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் போட்டி முடிந்தபின் செய்தியாளர் சந்திப்பில், விராட் கோலி கலந்து கொண்டு, பத்திரிக்கையாளர்களின் பல்வேறு கேள்விக்களுக்கு பதிலளித்துள்ளார். அதில் ஒரு சம்பவம் தான் இப்போது வைரலாகி வருகிறது.

நிருபர் ஒருவர் 'அடுத்த போட்டியில் மிக சிறப்பான பார்மில் இருக்கும் இஷான் கிஷனை அணியில் சேர்த்துவிட்டு ரோஹித் சர்மா அணியில் இருந்து நீக்கப்படுவாரா..?' எனக் கேட்டுள்ளார்.

அதற்கு விராட் கோலி யாரும் எதிர்பாராத வகையில் ஒரு ஷாக் ரியாக்சன் கொடுத்து 'இந்த கேள்விய தெரிஞ்சி கேக்குறீங்களா.  டி-20 போட்டிகளில் ரோஹித் சர்மா போன்ற அபாரமான ஆட்டக்காரரை நீக்க வேண்டும் கூறுகிறீர்களா..?' என கேட்டு சிரித்தார்.

அதோடு, அந்த கேள்வியை கேட்ட நிருபரிடம், 'உங்களுக்கு சர்ச்சை ஏதாவது ஏற்படுத்த வேண்டும் என்று விரும்பினால் என்னிடம் முதலிலேயே கூறிவிடுங்கள், அப்போது தான் நானும் நீங்கள் நினைப்பதை போல சர்ச்சை ஏற்படுமாறு பதில் கூறுவேன்' என கிண்டலடித்தும் உள்ளார். இந்த சம்பவம் குறித்தான வீடியோவும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்