‘நோ பால்’ மூலம் ஏற்படும் விக்கெட்டுக்கு முற்றுப்புள்ளி..! புதிய விதியை கொண்டுவரும் ஐசிசி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நோ பால் மூலம் அவுட்டாகி வீரர்கள் வெளியேறுவதை தடுக்க ஐசிசி புதிய விதியை கொண்டுவர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் நடுவர்கள் எடுக்கும் முடிவு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. சில நேரங்களில் நடுவர்கள் கவனக்குறைவாக கொடுக்கும் அவுட்டால் ஆட்டத்தின் முடிவுகள் மாறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இதனைத் தடுக்க ஐசிசி ரீ-வியூ என்னும் புதிய விதியை நடைமுறைப்படுத்தியது.  ஆனாலும் சர்வதேச கிரிக்கெட்டில் இதனை ஒரு முறைதான் பயன்படுத்த முடியும் என்பதால் நோ பால், எல்.பி.டபுள்.யூ போன்றவற்றின் மூலம் ஏற்படும் விக்கெட்டுகளை வீரர்களால் கேட்க முடியாமல் போய்விடுகிறது.

இதனை கருத்தில் கொண்டு விக்கெட் விழும் ஒவ்வொரு சமயமும் நடுவர்கள் ‘நோ பால்’ வீசப்பட்டுள்ளதா என்பதை கவனிக்க வேண்டும் என்ற விதியை ஐசிசி கொண்டு வர வேண்டும் என பிசிசிஐ கோரிக்கை வைத்தது. இதனை அடுத்து இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இந்த விதியை அமல்படுத்த ஐசிசி அனுமதி அளித்தது. தற்போது இந்த விதியை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கும் செயல்படுத்த ஐசிசி முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் நோ பால் மூலம் ஏற்படும் விக்கெட்டுகளை தடுக்க வாய்ப்பு உள்ளது.

ICC, BCCI, NOBALL, RULE, TEAMINDIA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்