வரலாற்றுலயே முதல்முறையா பாதியில் நிறுத்தப்பட்ட பிரபல கால்பந்து போட்டி.. காரணத்தை கேட்டு நெகிழ்ந்துபோன ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஜெர்மனியில் நடைபெற்றுவரும் பிரபல கால்பந்து தொடரில் ஒரு போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இதற்கான காரணம் வெளியான பிறகு அனைவரும் போட்டி நடுவரை கொண்டாடி வருகின்றனர்.

Advertising
>
Advertising

"இந்தாங்க கோவில் பிரசாதம்".. மர்ம நபர் கொடுத்த பானம்.. பக்தியோடு பருகிய மக்களுக்கு நேர்ந்த சோகம்..

கால்பந்து தொடர்

ஜெர்மனி நாட்டில் நடைபெற்றுவரும் பன்டெஸ்லிகா லீக் கால்பந்து தொடர் மிகவும் பிரசித்திபெற்றது. கால்பந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற இந்த தொடரில் கடந்த வாரம் நடைபெற்ற போட்டியில் மெயின்ஸ் மற்றும் ஆக்ஸ்பர்க் அணிகள் மோதின. இந்த போட்டியின் 65 வது நிமிடத்தில், நடுவர் மத்தியாஸ் ஜோலன்பெக் ஆட்டத்தை நிறுத்துவதாக அறிவித்தார்.

இதனால் ரசிகர்கள் குழப்பமடைந்தனர். ஆனால், சற்று நேரத்தில் ஆட்டம் மீண்டும் துவங்கியது. எதற்காக ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது என கேள்விகள் எழுப்பப்பட்டு வந்த நிலையில், அதற்கு நடுவர் கூறிய காரணம் அனைவரையும் நெகிழ வைத்திருக்கிறது.

ரமலான்

இஸ்லாமிய மக்கள் கடைபிடிக்கும் ரமலான் நோன்பு கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி துவங்கியது. இந்த புனித மாதத்தில் மக்கள் நோன்பு இருந்து கடவுளை வழிபடுவர். மாலை நோன்பு துறந்த பிறகே உணவு உட்கொள்வர். இந்நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற போட்டியில் மெயின்ஸ் அணிக்காக விளையாடிய பிரபல வீரர் மூஸா நியாகேட் ஆட்டத்தின் இடையே நோன்பு துறக்க நடுவரிடம் அனுமதி கேட்டுள்ளார்.

இதனை அறிந்த போட்டி நடுவர் மத்தியாஸ் ஜோலன்பெக் ஆட்டத்தை நிறுத்துவதாக அறிவித்தார். நியாகேட் தண்ணீர் குடித்து நோன்பை முடித்த பிறகு ஆட்டத்தை தொடர அனுமதியளித்தார் ஜோலன்பெக்.

கண்ணுபட போகுது.. ஒரே வீட்ல 5 தலைமுறையினர்.. ஆனந்த் மஹிந்திரா ஷேர் செஞ்ச க்யூட் வீடியோ..!

REFEREE, PLAYER, RAMADAN FAST, BREAK, கால்பந்து போட்டி, ரமலான்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்