இந்தியா-பாகிஸ்தான் இடையேயான டி20 உலகக்கோப்பை போட்டியை ‘ரத்து’ செய்யணும்.. பரபரப்பை கிளப்பிய மத்திய அமைச்சர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை போட்டியை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டி20 உலகக்கோப்பை (T20 World Cup) தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றன. இதில் வரும் 24-ம் தேதி இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. அதற்கு முன்னதாக இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி விளையாடுகிறது. இதில் இன்று (18.10.2021)  இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா விளையாட உள்ளது.

இந்த நிலையில், இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை தொடரை ரத்து செய்ய வேண்டும் என பஞ்சாப் மாநில அமைச்சர் பர்கத் சிங் கூறியுள்ளார். அதில், ‘டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நடத்தப்படக் கூடாது. ஏனென்றால் தற்போது எல்லையில் நிலைமை சரியில்லை. இரு நாடுகளும் அழுத்தமான காலக்கட்டத்தில் உள்ளன. இதை மேலும் அதிகரிக்கும் வகையில் எதையும் செய்யக்கூடாது’ என அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, சில நாட்களாக ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் அதிகரித்து வருவதால், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான டி20 உலகக்கோப்பை போட்டி தேவையா? என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கிடம் (Giriraj Singh) நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ‘இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான உறவு சரியாக இல்லை. அதனால் இந்த போட்டியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கருதுகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

இரு அணிகளுக்கும் இடையேயான போட்டி நடைபெற இன்னும் 5 நாட்களே உள்ளன. இந்த நிலையில் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறிய கருத்தால் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்