இந்த விஷயங்களை சரி பண்ணி இருந்தா.. ஒரு வேளை இந்தியா T20 உலகக் கோப்பையை ஜெயிச்சுருக்கலாம் போல!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலகக்கோப்பை தொடரில் நேற்றைய போட்டியில் இந்திய அணி அடைந்த தோல்வி குறித்து ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பேசி வருகின்றனர்.

Advertising
>
Advertising

Also Read | "மேட்ச் ஆரம்பிச்சதும் வீரர்கள் ஒண்ணு சொன்னாங்க".. தோல்விக்கு பின் மனம்திறந்த டிராவிட்!!

ஆஸ்திரேலியாவில்  நடைபெற்று வரும் டி 20 உலக கோப்பை தொடர்,  தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.

குரூப் 1 இல் இருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும், குரூப் 2 வில் இருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளும் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறின.

கடந்த புதன்கிழமை நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் நியுசிலாந்து அணியை  பாகிஸ்தான் அணி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் எதிர்த்து ஆடியது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி, நியுசிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில்  டாஸ் வென்று பேட்டிங் செய்த நியுசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி 19.1 ஓவரில் வெற்றி இலக்கை 3 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்து எட்டியது. இதனால் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி நியுசிலாந்து அணியை வென்றது. பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து கிரிக்கெட் அணியை அடிலெய்டு ஓவல் மைதானத்தில் எதிர்த்து விளையாடியது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜோஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் விக்கெட்டுகள் எதையும் இழக்காமல், 16 ஓவர்களில் இலக்கை எட்டி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற உதவினர்.

தற்போது கிரிக்கெட் ரசிகர்கள், விமர்சகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் இந்திய அணியின் தோல்வி குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

யுஸ்வேந்திர சாஹல் அணியில் இடம் பெறாதது குறித்து ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இருபது ஓவர் போட்டிகளில் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் பங்கு இன்றியமையாதது. இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளில் முறையே அடில் ரஷித், ஷதாப் கான் உள்ளனர். இந்திய அணியில் சாஹல் இருந்தும் ஒரு போட்டியில் கூட விளையாடாமல் போனது  பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

பவர்பிளேயில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் மந்தமாக ஆடியது பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 6 ரன்ரேட்டில் பவர்ப்ளேயில் ஆடுவது என்பது மிக மோசமான ஆட்டம் என ரசிகர்கள் கருத்து கூறியுள்ளனர். 

ரிஷப் பண்ட்டை உலக கோப்பை தொடரின் துவக்கத்தில் ஆட வைக்காதது குறித்தும் தற்போது விவாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் ராகுலின் நிதானமான ஆட்டம் மற்றும் பெரிய அணிகளுக்கு எதிராக மோசமான ஆட்டமும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

ஷமி தவிர வேகப்பந்து வீச்சாளர்களில் பந்தை 145 கிமீ வேகத்தில் தொடர்ந்து வீசும் திறனற்ற பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் இல்லாமல் போனது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இந்த விஷயங்களை இந்திய அணி சரி செய்து இருந்தால் ஒரு வேளை உலகக் கோப்பையை கூட வென்றிருக்கலாம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Also Read | இறுதிப்போட்டியில் பாகிஸ்தான், இங்கிலாந்து.. இது நிஜமாவே 1992 ஸ்க்ரிப்ட் தான் போலயே.. என்ன இவ்வளவு கனெக்ஷன்ஸ் இருக்கு?..

CRICKET, INDIAN CRICKET TEAM, WORLD CUP SEMI FINAL, WORLD CUP SEMI FINAL AGAINST ENGLAND

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்