ஓ.. அப்போ இதனால தான் கே.எல்.ராகுல் முதல் மேட்ச்ல விளையாடலையா! வெளியாகியுள்ள உண்மை காரணம்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா வெஸ்ட் இண்டீஸ் போட்டித் தொடரின் முதல் ஆட்டத்தில் இருந்து கே.எல்.ராகுல் விலகியதற்கான உண்மை காரணம் வெளியாகி இருக்கிறது.
6 பேருக்கு கொரோனா:
வரும் பிப்ரவரி 6ம் தேதி முதல் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ளது. இந்த போட்டி தொடரில் பங்கேற்க்க அகமதாபாத் சென்ற இந்திய அணியில் இருக்கும் 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் ஓப்பனிங் வீரர்கள் ஷிகர் தவான், ருதுராஜ் கெயிக்வாட் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு தான் கொரோனா உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகிய உள்ளது. இதில் கே.எல்.ராகுல் முதல் ஒருநாள் போட்டியில் இருந்து மட்டும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அவரை ரீப்பிலேஸ் செய்யும் வகையில் தவான், ருதுராஜ் நிரப்புவார்கள் எதிர்பார்த்த நிலையில் 2 ஓப்பனர்களுக்குமே தொற்று உறுதியாகி உள்ளது. இந்திய அணி இருக்கும் இக்கட்டான சூழலிலும் கூட கே.எல்.ராகுலை பிசிசிஐ அழைக்கவில்லை.
இந்நிலையில் தென்னாப்பிரிக்க தொடரில் கே.எல்.ராகுலின் கேப்டன்சி மீது அதிருப்தியடைந்த பிசிசிஐ, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரிஷப் பண்ட்-ஐ துணைக் கேப்டனாக செயல்பட வைத்து, அவரின் கேப்டன்சியையும் பார்த்து விடலாம் என திட்டமிட்டிருந்தது. இதன் காரணமாகவே கே.எல்.ராகுல் முதல் போட்டியில் வெளியேற்றப்பட்டார் என அரசல் புரசலாக செய்தி வெளியாகியது.
உண்மை காரணம்:
ஆனால், இப்போது கே.எல்.ராகுல் போட்டியில் தொடராததன் உண்மை காரணம் வெளிவந்துள்ளது. கே.எல்.ராகுலின் உடன்பிறந்த சகோதரி பாவ்னாவிற்கு கர்நாடகாவில் திருமண நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறதாம். இதில் பங்கேற்கவே கே.எல்.ராகுல் வெளியேறியுள்ளார் எனவும் அவரை அழைக்க முடியாத இக்கட்டான சூழலுக்கு பிசிசிஐ தள்ளப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும், ரோகித் சர்மாவுடன் ஓப்பனிங் இறங்குவதற்காக சீனியர் வீரர் மயங்க் அகர்வால் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
கே.எல்.ராகுல் இல்லாததால் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு பெற்று வந்த அவருக்கு அதிர்ஷ்டம் அடித்தது போன்று ஒருநாள் தொடரிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதோடு மிடில் ஆர்டரில் அணியில் ஏற்கனவே உள்ள வீரர்களை வைத்து சமாளிக்க உள்ளதாகவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஐபிஎல் புதிய அணி.. மீண்டும் கேப்டன் ஆகும் கே எல் ராகுல்.. இத்தன கோடிக்கு அவர வாங்கி இருக்காங்களா??
- வாவ்.. இது ஐபிஎல் சரவெடி! வந்தாச்சு 2 புது டீம்.. கேப்டன்கள் இவங்கதான்.. வீரர்கள் லிஸ்ட்.. முழு விபரம்!
- இத எல்லாம் பக்காவா செஞ்சாலே போதும்.. இந்தியா மேட்ச் ஜெயிச்ச மாதிரி தான்.. முழு விவரம் உள்ளே
- வெற்றி வாய்ப்பு இருந்தும்.. நழுவ விட்ட இந்திய அணி.. ராகுல் எடுத்த அந்த முடிவு தான் எல்லாத்துக்கும் காரணம்.. கடுப்பான ரசிகர்கள்
- நீண்ட நாள் காத்திருப்பு.. "இந்த தடவ மிஸ்ஸே ஆகாது.." தயாராகும் கோலி?.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
- ரோஹித்தா?.. ராகுலா?.. கோலியின் இடம் யாருக்கு?.. இந்த 'லிஸ்ட்'ல சர்ப்ரைஸாக இருக்கும் இளம் வீரர்
- 'சீக்கிரமா கத்துக்கிட்டா அவருக்கு நல்லது'- கே.எல்.ராகுல் கேப்டன்ஸி எப்படி இருந்தது?- ஜாம்பவான்களின் ஸ்கோர்!
- அவுட் ஆனதால் விரக்தி.. மோதலில் ஈடுபட்ட கே எல் ராகுல்.. மைதானத்தில் நிலவிய பரபரப்பு
- சிறு வயது நட்பு.. ராஞ்சி முதல் இந்தியா டீம் வரை.. நெகிழ வைத்த கே எல் ராகுல் - மயங்க் அகர்வால்
- தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: ரஹானேவுக்கு பதில் இவரா?- கே.எல்.ராகுல் ஓப்பன் டாக்