‘இது காரணமா இல்லைன்னா வேற என்ன காரணமா இருக்கும்..?’- வார்னரை நீக்கியதற்கு ஹைதராபாத் அணி என்ன சொல்றாங்கன்னு பாருங்க..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபில் 2021 போட்டிகளின் போது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக டேவிட் வார்னர் விளையாடி வந்தார். ஆனால், ஐபிஎல் 2021-ன் முதல் பாதியில் ஹைதராபாத் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீங்கிய வார்னர் பிற்பாதியில் ‘ஆடும் 11 வீரர்கள்’ அணி பட்டியலில் இருந்துமே நீக்கப்பட்டார். வார்னர் ஏன் ‘ஆடும் 11 வீரர்கள்’ பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார் என்பதை SRH அணியின் துணை பயிற்சியாளர் ப்ராட் ஹேடின் பகிர்ந்துள்ளார்.
ஐபிஎல் 2021 தொடரின் போது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய வார்னர் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு பின்னர் ஆடும் 11 வீரர்கள் அணி பட்டியலில் இருந்தும் நீக்கப்பட்டார். வார்னர் ‘அவுட் ஆஃப் ஃபார்ம்’ ஆகிவிட்டார். அவரால் மீண்டும் தனது அதிரடி ஆட்டத்தைக் காட்ட முடியவில்லை என்று எல்லாம் விமர்சனங்கள் எழுந்தன. அத்தனை விமர்சனங்களையும் மீறி துபாயில் சமீபத்தில் நடந்த டி20 உலகக்கோப்பை இறுதி போட்டியில் தனது அதிரடி ஆட்டத்தால் ஆஸ்திரேலியாவுக்கு கோப்பையைக் கைபற்றித் தர உதவினார் வார்னர்.
வார்னரின் டி20 உலகக்கோப்பை ஆட்டத்தைப் பார்த்து ரசிகர்கள் பலரும் வார்னர் தனது அதிரடிக்குத் திரும்பிவிட்டார் என்றே புகழ்ந்து வருகின்றனர். இதன் மூலம் 2022 ஐபிஎல் போட்டிகளில் பல அணிகளும் வார்னரை தங்கள் பக்கம் சேர்த்துக் கொள்ள முன் வருவர் என்றும் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இந்த சூழலில் கடந்த 2021 ஐபிஎல் போட்டிகளின் போது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இருந்து வார்னர் நீக்கப்பட்டதன் காரணம் குறித்து அந்த அணியின் துணை பயிற்சியாளர் ப்ராட் ஹேடின் பேசியுள்ளார்.
ஹேடின் கூறுகையில், “வார்னர் ‘ஆவுட் ஆஃப் ஃபார்ம்’ ஆகிவிட்டார் என்ற காரணத்துக்காக அவரை அணியில் இருந்து நீக்கவில்லை. வார்னருக்கு ஆட்டத்தில் பங்கேற்ற பயிற்சி இல்லாமல் தான் போய்விட்டது. ஆஸ்திரேலியா அணி வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு எதிராக மோதிய போது வார்னர் அந்த அணியில் இடம் பெறவில்லை. இதனால் அவருக்கு போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடுவதற்கான பயிற்சி இல்லாமல் போய்விட்டது.
ஆனால், அவர் நெட் பயிற்சியின் போது எல்லாம் சிறப்பாகவே விளையாடினார். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் வார்னர் விளையாடமல் போனதற்கு கிரிக்கெட் காரணம் இல்லை. அவருக்குப் போட்டிகளில் கலந்து கொண்டு ஆடி ரொம்ப நாளாகி இருந்தது. அதனால் அவருக்கு போட்டிகள் கலந்து ஆடும் அனுபவம் மீண்டும் தேவைப்பட்டது. மீண்டும் தனது பாதையில் அவர் பயணிக்க பயிற்சிகளை விட போட்டிகள் தான் உதவும்” என பேசியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கோலி இடத்துக்கு ‘இவரா’? ஐபிஎல் 2022-ல் ஆர்சிபி கேப்டன் ஆகப்போவது யார்?- முன்னாள் சுழற்பந்து வீச்சாளரின் ‘ஹின்ட்’..!
- ‘இவரையா வெளியே உட்காரவச்சீங்க’!.. டி20 உலகக்கோப்பையில் என்ன ‘விருது’ வாங்கியிருக்காரு பாருங்க.. SRH அணியை வச்சு செய்யும் ரசிகர்கள்..!
- VIDEO: தம்பி, நீங்க பந்த 'தரையில' உருட்டி போட்டாலும் நான் 'சிக்ஸ்' அடிப்பேன்...! 'வார்னர் அடித்த மொரட்டு சிக்ஸ்...' 'மண்டையை பிய்த்துக் கொண்ட ரசிகர்கள்...' - வைரல் வீடியோ...!
- என்ன வார்னர் 'இப்படி' பண்ணிட்டீங்க...? இதுகூட தெரியாம கிளம்பிட்டீங்களே...! 'அதுவும் இப்படி ஒரு முக்கியமான மேட்ச்ல...' - 'ரீப்ளே' பார்த்து ரசிகர்கள் கடும் அதிர்ச்சி...!
- ‘எனக்காக வீணா பணத்தை செலவு பண்ண வேண்டாம்’!.. திடீரென குண்டை தூக்கிப்போட்ட தோனி.. அப்படின்னா அடுத்த வருசம்..? சிஎஸ்கே உரிமையாளர் சொன்ன ‘முக்கிய’ தகவல்..!
- VIDEO: ‘இது ஒன்னும் ஐபிஎல் இல்ல.. நீங்க உலகத்திலேயே பெரிய கிரிக்கெட் வாரியமாக இருக்கலாம், ஆனா..!’ பிசிசிஐக்கு எதிராக கொந்தளித்த ரசிகர்.. ‘செம’ வைரல்..!
- ஒருவேளை SRH உங்களை தக்க வைக்கலைன்னா என்ன பண்ணுவீங்க..? டேவிட் வார்னர் அதிரடி பதில்..!
- ‘ஐபிஎல் மெகா ஏலம்’.. ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்க வைக்கலாம்..? கசிந்த தகவல்..!
- ‘நான் பேட்டிங் செஞ்சா எப்படி பீல்டிங் செட் பண்ணுவார் தெரியுமா..?’ ஐபிஎல்-ல் தோனி போட்ட ‘மாஸ்டர்’ ப்ளானை சொன்ன மார்கஸ் ஸ்டோனிஸ்..!
- எப்படி அவங்க புது ஐபிஎல் அணியை வாங்குனாங்க..? ஏலம் எடுத்த கம்பெனி எங்க ‘முதலீடு’ செஞ்சிருக்காங்க தெரியுமா..? திடீரென குண்டை தூக்கிப் போட்ட லலித் மோடி..!