நல்லா விளையாடிட்டு இருந்த மனுசன் ‘திடீர்ன்னு’ ஏன் வெளியேறினார்..? குழம்பிய ரசிகர்கள்.. காரணம் இதுதான்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்த பின் திடீரென ரோஹித் ஷர்மா வெளியேறியதற்கான காரணம் வெளியாகியுள்ளது.

டி20 உலகக்கோப்பை (T20 World Cup) தொடரின் நேற்றைய பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் இந்தியா மோதியது. இப்போட்டியில் விராட் கோலிக்கு (Virat Kohli) ஓய்வு கொடுக்கப்பட்டு ரோஹித் ஷர்மாவுக்கு (Rohit Sharma) கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஸ்டீவன் ஸ்மித் 57 ரன்களும், மார்கஸ் ஸ்டோனிஸ் 41 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி, 17.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக ரோஹித் ஷர்மா 60 ரன்கள் எடுத்தார். இந்த நிலையில், இப்போட்டியில் அவுட்டாகாமல் பாதியிலேயே ரோஹித் ஷர்மா வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

பொதுவாக பயிற்சி ஆட்டங்களில், இக்கட்டான சூழலில் வீரர்கள் எப்படி விளையாடுகின்றனர் என்பதை சோதித்து பார்ப்பார்கள். அந்தவகையில் நேற்றைய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ரோஹித் ஷர்மா மற்றும் கே.எல்.ராகுல் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இந்த கூட்டணி 9.2 ஓவர்களில் 68 ரன்களை எடுத்திருந்தது. அப்போது கே.எல்.ராகுல் 39 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதனை அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவுடன் ஜோடி சேர்ந்த ரோஹித் ஷர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதனால் 41 பந்துகளில் 60 ரன்கள் விளாசினார். இதன்காரணமாக கடைசி 5 ஓவர்களில் 26 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்திய அணி இருந்தது. அப்போது ‘Retired out’ முறையில் ரோஹித் ஷர்மா வெளியேறினார். அதாவது, நன்றாக விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு வீரர், மற்றொரு வீரருக்கு விளையாட வாய்ப்பு கொடுப்பதற்காக இவ்வாறு செய்வார்கள்.

அதன்படி நேற்றைய ஆட்டத்தில், கடைசி கட்டத்தில் வீரர்கள் எப்படி விளையாடுகின்றனர் என்பதை சோதிப்பதற்காக ரோஹித் ஷர்மா வெளியேறினார். இதனை அடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவுடன் கூட்டணி அமைத்து 17.5 ஓவர்களிலேயே இலக்கை விரட்டி அணியை வெற்றி பெற வைத்தனர். முன்னதாக நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின்போதும், இதேபோல் இளம் வீரர் இஷான் கிஷன் 70 ரன்கள் அடித்தபின் அவுட்டாகாமல் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்