IND vs WI : களம் ஒன்றில் ரிஷப் பாண்ட்.. ரோகித் ஷர்மா போட்ட மாஸ்டர் பிளான்! 'இது லிஸ்ட்லயே இல்லையே'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டி, தற்போது நடைபெற்று வருகிறது.
முன்னதாக, இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், இந்திய அணி அபார வெற்றி பெற்றிருந்தது.
இந்திய அணியின் புதிய கேப்டனாக களமிறங்கிய ரோஹித் ஷர்மா, தன்னுடைய முதல் போட்டியிலேயே பலரின் பாராட்டுகளையும் பெற்றிருந்தார். கோலியுடன் சேர்ந்து அவர் போட்ட திட்டங்களும், இந்திய அணிக்கு பெரிய அளவில் கை கொடுத்தது.
கே எல் ராகுல்
இதனைத் தொடர்ந்து, இரு அணிகளுக்கும் இடையே இரண்டாவது ஒரு நாள் போட்டி, தற்போது நடைபெற்று வருகிறது. கே எல் ராகுல் மீண்டும் அணிக்கு திரும்பியதால், இளம் வீரர் இஷான் கிஷான் ஆடும் லெவனில் இடம்பெறவில்லை. இந்த போட்டியில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, பீல்டிங்கை தேர்வு செய்திருந்தது.
இந்திய அணி எடுத்த முடிவு
அதன்படி, பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில், 9 விக்கெட்டுகள் இழப்புக்கு, 237 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக, சூர்யகுமார் யாதவ் 64 ரன்கள் எடுத்திருந்தார். தொடர்ந்து, இலக்கை நோக்கி, வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. இதனிடையே, இந்திய அணி இந்த போட்டியில், ரோஹித் ஷர்மா எடுத்த முடிவு ஒன்று, பலரையும் திரும்பி பார்க்க வைத்திருந்தது.
ஆச்சரியத்தில் ரசிகர்கள்
ராகுல் அணிக்கு திரும்பியதால், ரோஹித் மற்றும் ராகுல் ஆகியோர் தான் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள் என எதிர்பார்த்தனர். ஆனால், விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், ரோஹித்துடன் தொடக்க வீரராக களமிறங்கினார். இந்திய அணியின் முடிவு, ரசிகர்கள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
தொடக்க வீரர் ரிஷப் பண்ட்
மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் தொடக்க வீரராக களமிறங்கியதால், என்ன காரணம் என்பது தெரியாமல், பலரும் குழம்பிப் போயினர். இதற்கு ரசிகர்கள் பலரும், பல்வேறு காரணங்களை தெரிவித்து வந்தனர். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தொடக்க வீரர் ஆடம் கில்க்றிஸ்ட், ஒரு இடதுகை பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர் ஆவார். அவரைப் போலவே, இடதுகை பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட்டும், தொடக்க வீரராக இனி களமிறங்குவார் என எதிர்பார்க்கலாம் என்றும் பலர் தெரிவித்தனர்.
வெளியான தகவல்
இந்நிலையில், பண்ட்டை தொடக்க வீரராக களமிறக்க, இந்திய அணி வித்தியாசமாக முயற்சிகள் மேற்கொண்டது பற்றி, சில தகவல்கள் வெளியாகியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில், தொடக்க வீரர் ஷிகர் தவான் இடம்பெற்றிருந்தார். ஆனால், கொரோனா தொற்றின் காரணமாக, அவரால் களமிறங்க முடியாமல் போனது.
கேப்டன் ரோஹித் ஷர்மா
இதன் காரணமாக, முதல் போட்டியில் இஷான் கிஷான் ஓப்பனிங் வீரராக களமிறங்கியிருந்தார். தொடர்ந்து, இந்த போட்டியில் ரிஷப் பண்ட் களமிறங்கியுள்ளார். அடுத்த உலக கோப்பைக்கு முன்பாக, இந்திய அணி இது போன்று பல பரிசோதனை முயற்சிகளை போட்டியின் போது மேற்கொண்டு பார்க்கும் என கேப்டன் ரோஹித் ஷர்மா தெளிவுபடுத்தியதாக கூறப்படுகிறது.
கவனத்தை பெற்ற முடிவு
அதன் பெயரில் தான், ரிஷப் பண்ட்டை தொடக்க வீரராக இன்று களமிறக்கி, இந்திய அணி முயற்சிகளை கையாண்டுள்ளது. அதே போல, கே எல் ராகுலும் மிடில் ஆர்டரில் சிறப்பாக ஆடக் கூடிய வீரர். இதன் காரணமாக, அவரை இன்றைய போட்டியில் தொடக்க வீரராக களமிறக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
போட்டியின் முடிவு என்பதைத் தாண்டி, உலக கோப்பை மற்றும் வரவிருக்கும் தொடர்களை மனதில் கொண்டு, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் ரோஹித் ஷர்மாவின் செயல், பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஒருநாள் போட்டியில் முதல் இந்திய பேட்ஸ்மேன்.. ரோஹித் செய்ய இருக்கும் சம்பவம் என்னன்னு தெரியுமா?
- இப்டி பேசுறவங்கள என்ன தான் பண்றது??.. கோலி - ரோஹித் விவகாரம்.. கடுப்பான சுனில் கவாஸ்கர்
- கட்டம் கட்டித் தூக்கிய ரோஹித் ஷர்மா.. கூடவே கோலியும் போட்ட 'ஸ்கெட்ச்' பக்கா.. குழம்பி நின்ற பேட்ஸ்மேன்
- இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. சிரிச்சிக்கிட்டே ரோஹித் சொன்ன வார்த்தை.. எகிறும் எதிர்பார்ப்பு..!
- VIDEO: அட்வைஸ் பண்ண வந்த கோலியை அலட்சியம் செய்தாரா ரோஹித்..? சர்ச்சையை கிளப்பிய போட்டோ.. உண்மை என்ன..?
- VIDEO: கேட்கவா, வேண்டாமா..? குழம்பி நின்ற ரோகித்.. வேகமாக ஓடி வந்த கோலி.. முதல் மேட்சே ‘வேறலெவல்’ சம்பவம்..!
- "தோனி, கோலி கிட்ட கரெக்ட்டா இருந்த ஒரு விஷயம்.. ரோஹித் கிட்ட சுத்தமா மிஸ்ஸிங்.." புதிய கேப்டனுக்கு காத்திருக்கும் மிகப் பெரிய சவால்
- "அவரு எல்லாம் ஒரு ஆல் ரவுண்டரா?".. இந்திய வீரரை கிழித்து தொங்க விட்ட முன்னாள் வீரர்
- தோனி மாதிரி பெரிய ஃபினிஷரா வரணும்.. ஆசைப்படும் 'தமிழக' இளம் வீரர்.. ஆஹா, 'சிஎஸ்கே' ஏலத்துல தூக்குனா செமயா இருக்குமே
- வரலாறு படைக்க போகும் இந்திய அணி.. எந்த அணியும் தொடாத உயரம்.. எல்லாம் ரோஹித் கேப்டன் ஆன நேரம் போல