First Half போட்டியில் டாப் கியர்.. Second Half'ல ரிவர்ஸ் கியர்.. "RCB-யின் பின்னடைவுக்கு காரணங்கள் இதுவா??..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

விராட் கோலி, முகமது சிராஜ், மேக்ஸ்வெல் ஆகியோரைத் தக்க வைத்துக் கொண்டு, புதிய கேப்டன் பாப் டு பிளெஸ்ஸிஸ், ஹேசல்வுட், தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட பல புதிய வீரர்களுடன் 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கால் பதித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்.

Advertising
>
Advertising

Also Read | முன்னாள் கிரிக்கெட் வீரரை மனநல மருத்துவமனைக்கு அனுப்ப உத்தரவிட்ட நீதிமன்றம்.. என்ன காரணம்? வெளியான பரபரப்பு தகவல்..!

2009, 2011 மற்றும் 2016 நடந்த ஐபிஎல் தொடரில் இறுதி போட்டிக்கு முன்னேறிய ஆர்சிபி, ஒருமுறை கூட கோப்பையைக் கைப்பற்றியதில்லை.

கிறிஸ் கெயில், யுவராஜ் சிங், பீட்டர்சன், டிவில்லயர்ஸ், டில்ஷான், வாட்சன் என ஒரு ஜாம்பவான் பட்டாளமே பெங்களூர் அணிக்காக ஆடியுள்ளது. ஆனால், ஐபிஎல் கோப்பையை தொட்டு பார்க்கும் பெங்களூர் அணிக்கு எட்டா கனி தான்.

நல்ல ஸ்டார்ட் கொடுத்த 'RCB'

எப்போதும், 'ஈ சாலா கப் நம்தே' என்ற கோஷத்துடன் ஐபிஎல் தொடரை வரவேற்கும் ஆர்சிபி ரசிகர்கள், இந்த முறையும் அதே கோஷத்துடன் காத்திருந்தனர். பஞ்சாப் அணிக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வி கண்ட ஆர்சிபி, கொல்கத்தா, ராஜஸ்தான் மற்றும் மும்பை அணிகளுக்கு எதிராக தொடர் வெற்றிகளை பெற்றிருந்தது.

இரண்டாம் பாதியில் தடுமாற்றம்

மீண்டும் ஒரு தோல்வி (சிஎஸ்கேவுக்கு எதிராக), அடுத்து இரண்டு வெற்றிகள் என முதல் 7 போட்டிகளில், ஐந்து வெற்றிகளுடன் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாகவும் ஆர்சிபி திகழ்ந்தது. இதன் பின்னர், யார் கண் பட்டதோ தெரியவில்லை. அடுத்தடுத்து இரண்டு படு தோல்விகள். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 68 ரன்களில் ஆல் அவுட்டான ஆர்சிபி, நேற்று (26.04.2022) ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், 145 ரன்கள் என்ற இலக்கை எட்ட முடியாமல், 115 ரன்களில் ஆல் அவுட்டானது.

தினேஷ் கார்த்திக் மட்டும் என்ன பண்ணுவாரு??

ஐபிஎல் தொடரில், பெங்களூர் அணியிலுள்ள பேட்டிங் வரிசை, அதிக கவனத்தை பெற்ற ஒன்றாகும். டு பிளெஸ்ஸிஸ், விராட், மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் என ஒருவர் அவுட் ஆனால், மற்றொருவர் அணியைக் காப்பாற்றக் கூடிய பேட்ஸ்மேன்கள். அப்படி இருந்தும், ரன் அடிக்காமல் திணறி வருகிறது ஆர்சிபி. ஆரம்பத்தில் சில போட்டிகளில், சிறந்த பினிஷராக உருமாறிய தினேஷ் கார்த்திக் அணிக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தார். ஐந்தில் 3 வெற்றிகள் தினேஷ் கார்த்திக் மூலம் வந்தது தான்.

ஆனால், அவர் சொதப்பிய கடைசி இரண்டு போட்டிகளில், பெரிய அளவில் ரன் கூட அடிக்க முடியாமல் ஆர்சிபி தடுமாறியது. முன்னாள் ஆர்சிபி வீரர் டிவில்லியர்ஸ் இடத்தை தினேஷ் கார்த்திக் நிரப்பி விட்டதாக பெங்களூர் ரசிகர்கள் ஆரம்பத்தில் தெரிவித்தனர். ஆனால், அவரும் சொதப்ப ஆரம்பிக்க, தற்போது டிவில்லியர்ஸை மிஸ் செய்வதாக வருத்தத்துடன் குறிப்பிட்டு வருகின்றனர்.

டிவில்லியர்ஸ் இருந்தப்போ..

டிவில்லியர்ஸ் இருந்த பெங்களூர் அணிக்கே இது தான் நிலைமை. 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில், முதல் 9 போட்டிகளில் 7 இல் வெற்றி கண்டிருந்த பெங்களூர், கடைசி ஐந்து லீக் போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. ரன் ரேட் அடிப்படையில் மட்டுமே அவர்கள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி இருந்தனர்.தொடர்ந்து, 2021 ஆம் ஆண்டில், நல்ல அணியாக இருந்த பெங்களூர், பிளே ஆப் சுற்றிலேயே தோல்வி அடைந்து வெளியியேறியது.

2020 மற்றும் 2021 ஐபிஎல் தொடரில், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறினாலும், அதனை இறுதி போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பாக மாற்ற ஆர்சிபி தவறி விட்டது. இப்படி இருக்கையில், நடப்பு ஐபிஎல் தொடரில், சிறந்த வீரர்கள் அணியில் இடம்பெற்ற போதும், தொடர்ந்து தவறை செய்து கொண்டே இருக்கிறது ஆர்சிபி. கேப்டன் பதவியில் இருந்து விலகிய கோலி, பேட்டிங்கில் பட்டையைக் கிளப்புவார் என எதிர்பார்த்தால், வந்த வேகத்தில் நடையைக் கட்டுகிறார்.

விராட் கோலியின் ஃபார்ம்

பெங்களூர் அணியில் அவர் ஆடுவதை நினைத்து வருத்தப்படுவதா அல்லது டி 20 உலக கோப்பை இந்தாண்டு நடைபெறவுள்ளதால், இந்திய அணியை எண்ணி வருத்தப்படுவதா என ரசிகர்கள் சோகத்துடன் பதிவிட்டு வருகின்றனர். எந்த ஒரு சிறந்த வீரருக்கும் ஒரு மோசமான சமயம் வரும். அதனை நிச்சயம் விராட் கோலி சரி செய்வார் என்றும் நம்பிக்கையில் உள்ளனர் ரசிகர்கள்.

அதே போல, கடந்த ஆண்டு தொடக்க வீரராக ஆடிய படிக்கல்லை ஆர்சிபி தக்க வைத்துக் கொள்ளவும் இல்லை. ஐபிஎல் ஏலத்திலும் எடுக்கவில்லை. இதனால், பெங்களூர் அணியின் ஓப்பனிங்கும் ஓரளவு தடுமாற்றத்தை கண்டு வருகிறது. ஒன்றிரண்டு முறை தொடக்க ஜோடி மாற்றி பார்த்தும் அது கை கொடுக்கவில்லை.

பெங்களூர் அணியின் பந்து வீச்சில் ஹேசல்வுட் மட்டும் தான் தொடர்ந்து நிலையான ஃபார்மை வெளிப்படுத்தி வருகிறார். மற்ற அனைவரும், சீசனில் பழங்கள் காய்ப்பது போல, எப்போதாவது சிறப்பாக செயல்படுகின்றனர்.

என்ன செய்ய வேண்டும் ஆர்சிபி?

முதல் பாதியில் சிறந்ததாக விளங்கிய ஆர்சிபியின் இரண்டாம் பாதி லீக் போட்டிகள், 2020 ஆம் ஆண்டு போல நிகழ்ந்து விடக் கூடாது என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். ஒட்டு மொத்தத்தில், டிவில்லயர்ஸோ, தினேஷ் கார்த்திக்கோ ஒரு வீரர் தன்னுடைய அணியைக் காப்பாற்றுவது கிரிக்கெட் விளையாட்டு அல்ல. குறைந்தது, 6 முதல் 7 வீரர்கள், தங்களின் முத்திரையை தொடர்ந்து பதித்து கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான், ஈ சாலா கப் நம்தே என காலரைத் தூக்கி விட்டு சொல்ல முடியும்.

இனி வரும் போட்டிகளில், நிச்சயம் ஆர்சிபி கம்பேக் கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இல்லை எனில், 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் எப்போது ஆரம்பிக்கும் என்பதை தான் ஆர்சிபி ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்க வேண்டும் என கிரிக்கெட் நிபுணர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

CRICKET, VIRAT KOHLI, RCB, AB DE VILLIERS, DINESH KARTHIK, IPL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்