நம்ம கோலியா இது.. ‘ஊ சொல்றியா’ பாட்டுக்கு வேறலெவல் டான்ஸ்.. செம வைரல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் சமந்தா நடனம் ஆடிய பாடலுக்கு விராட் கோலி நடனமாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | ‘அதே கிரவுண்ட்’.. மறக்க முடியாத சம்பவம்.. மறைந்த ஷேன் வார்னேவுக்காக RR அணி எடுத்துள்ள சிறப்பான முன்னெடுப்பு..!

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்ச்ர்ஸ் பெங்களூரு அணிக்காக ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் விளையாடி வருகிறார். கடந்த ஐபிஎல் சீசனில் இவர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதனால் பெங்களூரு அணி அவரை ரூ.11 கோடிக்கு தக்கவைத்தது.

மேக்ஸ்வெல், ஆஸ்திரேலியாவில் வளர்ந்த தமிழக பெண்ணான வினி ராமன் என்பவரை காதலித்து வந்தார். இவர்களுக்கு கடந்த 2020-ம் ஆண்டு இந்திய முறைப்படி நிச்சயதார்த்தம் நடந்தது. அதன்பின்னர் கொரோனா அச்சுறுத்தல், ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் அவர்களது திருமணம் தள்ளிப்போனது.

இந்த நிலையில், கிளென் மேக்ஸ்வெல் தனது நீண்ட நாள் காதலியான வினி ராமனை ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டார். தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் மேக்ஸ்வெல் விளையாடி வருகிறார். அதனால் பெங்களூரு அணி, மேக்ஸ்வெல்லின் திருமண கொண்டாட்ட விழா ஒன்றை ஏற்பாடு செய்தது.

இந்த விழாவில் பெங்களூரு அணி வீரர்கள் தங்களின் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். அதில் பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் கலந்து கொண்டார். அப்போது விழாவில் சமீபத்தில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் நடிகை சமந்தா நடனமாடிய ‘ஊ சொல்றியா’ பாடல் ஒலிபரப்பட்டது.

இந்த பாடலுக்கு பலரும் ஆடி கொண்டு இருந்த நேரத்தில். திடீரென யாரும் எதிர்பாராத வகையில் விராட் கோலி இந்த பாடலுக்கு நடனமாடினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

 

VIRAT KOHLI, RCB VIRAT KOHLI, PUSHPA MOVIE, OO ANTAVA SONG

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்