"உங்க 'டீம்'க்கு ரொம்ப பெரிய 'நன்றி'ங்க .." 'பெங்களூர்' அணியை பங்கமாக கலாய்த்த 'பஞ்சாப்'.. பதிலுக்கு 'RCB' செய்த 'கமெண்ட்' தான் இப்போ செம 'வைரல்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

14 ஆவது ஐபிஎல் சீசன் நேற்று ஆரம்பமான நிலையில், நேற்று நடைபெற்ற முதல் போட்டியில், கோலி தலைமையிலான பெங்களூர் அணி, கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றிருந்தது.

இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 20 ஓவர்கள் முடிவில், 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. பெங்களூர் அணியின் பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேல் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியிருந்தார். தொடர்ந்து, ஆடிய பெங்களூர் அணியில், மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ் ஆகியோர் அதிரடி காட்டியிருந்த போதும், கடைசி ஓவரில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

கடைசி பந்தில், ஒரு ரன் தேவைப்பட, பெங்களூர் அணி வீரர்கள், ரன்களை வேகமாக ஓடி எடுக்க, பெங்களூர் அணி, இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. முன்னதாக, கடந்த சீசனில் பஞ்சாப் அணிக்காக ஆடிய மேக்ஸ்வெல், பெரிதாக ஜொலிக்காததால், அந்த அணி ஏலத்திற்கு முன்பாக அவரை அணியில் இருந்து விடுத்திருந்தது.

அதன் பிறகு, நடைபெற்ற ஏலத்தில், பெங்களூர் அணி மேக்ஸ்வெல்லை எடுத்தது. இந்நிலையில், நேற்றைய முதல் போட்டியிலேயே, சிக்ஸர்கள் அடித்து அசத்திய மேக்ஸ்வெல், பஞ்சாப் அணிக்காக கடந்த சீசனில் ஒரு சிக்ஸரை கூட அடிக்கவில்லை.


இதனிடையே, பெங்களூர் அணி தங்களது ட்விட்டர் பக்கத்தில், மேக்ஸ்வெல்லின் சிக்ஸரை பாராட்டி, பஞ்சாப் அணி அவரை விடுவித்ததற்காக, பஞ்சாப் அணியை டேக் செய்து கிண்டலாக நன்றி தெரிவித்திருந்தது.

 

இந்த ட்வீட் அதிகம் வைரலான நிலையில், பஞ்சாப் அணி பெங்களூர் அணியின் ட்வீட்டிற்கு அசத்தல் பதிலடி ஒன்றை கொடுத்தது. கே எல் ராகுல், கெயில், மந்தீப் சிங், மயங்க் அகர்வால், சர்ப்ராஸ் கான் உள்ளிட்ட வீரர்கள், பெங்களூர் அணிக்காக, சில சீசன்களுக்கு முன்பு ஆடியுள்ளனர். அவர்கள் தற்போது பஞ்சாப் அணிக்காக ஆடி வரும் நிலையில், இத்தனை வீரர்களை எங்களுக்கு தந்ததற்கு பெங்களூர் அணிக்கு நன்றி கூறி ட்வீட் செய்துள்ளது.

 

இத்துடன், இதனை நிறுத்த விரும்பாத பெங்களூர் அணி, பஞ்சாப் அணியின் பதிலடிக்கு கூறிய கமெண்ட்டில், 'நீங்கள் ஜெர்சி, ஹெல்மெட், லோகோ உள்ளிட்டவற்றை மறந்து விட்டீர்கள்?' என கூறியுள்ளது. இதற்கு காரணம், பெங்களூர் அணியின் ஜெர்சி, ஹெல்மெட் மற்றும் லோகோ ஆகியவற்றை போலவே, பஞ்சாப் அணியும் தங்களது ஜெர்சி உள்ளிட்டவற்றை உருவாக்கியுள்ளது. இதனைக் குறிப்பிட்ட பெங்களூர் அணி, அப்படி கமெண்ட் செய்திருந்தது.

 

பொதுவாக, ஐபிஎல் போட்டிகளில், எந்த அளவுக்கு பரபரப்பு இருக்குமோ, அதே அளவுக்கு, அனைத்து அணிகளின் ட்விட்டர் பதிவுகளும் ரசிகர்களின் கவனத்தைப் பெறும்.


இந்த சீசனிலும், ஒரு போட்டி முடிவடைந்ததுமே, அணிகளின் ட்விட்டர் பக்கங்கள், மாறி மாறி நக்கலாக ட்வீட் செய்து வருவது நெட்டிசன்களிடையே அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்