‘யாருங்க அந்த பையன்..?’ ஐபிஎல்-ல் அறிமுகமாகும் முதல் ‘சிங்கப்பூர்’ ப்ளேயர்.. நேக்கா தூக்கிய RCB.. வெளியான சுவாரஸ்ய பின்னணி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நடப்பு ஐபிஎல் தொடரில் சிங்கப்பூர் இளம் கிரிக்கெட் வீரரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

‘யாருங்க அந்த பையன்..?’ ஐபிஎல்-ல் அறிமுகமாகும் முதல் ‘சிங்கப்பூர்’ ப்ளேயர்.. நேக்கா தூக்கிய RCB.. வெளியான சுவாரஸ்ய பின்னணி..!

இந்தியாவில் நடைபெற்ற 14-வது சீசன் ஐபிஎல் தொடர் கொரோனா தொற்று காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதனால் எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இப்போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் 19-ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதற்காக ஐபிஎல் வீரர்கள் பலரும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.

RCB signed Tim David, The first Singapore cricketer to land IPL

ஆனால் இப்போட்டியில் வெளிநாட்டு வீரர்கள் பலரும் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடிய ஆஸ்திரேலிய வீரர்களான ஆடம் ஜாம்பா, கேன் ரிச்சர்ட்சன், டேனியல் சாம்ஸ் உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்கமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RCB signed Tim David, The first Singapore cricketer to land IPL

அதனால் அவர்களுக்கு பதிலாக இலங்கை அணியின் ஹசரங்கா, துஸ்மந்தா சமீரா ஆகியோரை பெங்களூரு அணி எடுத்துள்ளது. இதில் சமீபத்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் ஹசரங்கா அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதில் அவருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சிங்கப்பூர் வீரரான டிம் டேவிட்டை பெங்களூரு அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்மூலம் ஐபிஎல் தொடரில் இடம்பெறும் முதல் சிங்கப்பூர் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இவரை அணியில் எடுக்க காரணம் என்ன? என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

சிங்கப்பூரில் பிறந்த வளர்ந்த டிம் டேவிட் (25 வயது), அந்நாட்டு அணிக்காக 14 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். பின்வரிசையில் களமிறங்கிய அதிரடியாக விளையாடும் அவர், இதுவரை 558 ரன்களை எடுத்துள்ளார். தற்போது ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்த டிம் டேவிட், அந்நாட்டின் குடியுரிமை பெற்று அங்கு நடைபெறும் உள்ளூர் டி20 தொடர்களில் விளையாடி வருகிறார்.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த பிக் பேஷ் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடிய டிம் டேவிட், தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார். தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து அணி இக்கட்டான நிலையில் இருந்தபோதெல்லாம், பின்வரிசையில் களமிறங்கி பல போட்டிகளில் வென்று கொடுத்துள்ளார்.

அதேபோல் பாகிஸ்தான் பிரீமியர் லீக்கிலும் டிம் டேவிட் விளையாடி வருகிறார். பின்வரிசையில் பினிஷர் ரோலில் விளையாட வைக்க இவரை பெங்களூரு அணி ஒப்பந்தம் செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்