சும்மா சுத்தி சுத்தி அடிச்ச 'இளம்' புயல்.. மிரட்டித் தள்ளிய 'ஓப்பனிங்' காம்போ.. உச்சக்கட்ட மகிழ்ச்சியில் 'RCB' ரசிகர்கள்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில், ராஜஸ்தான் அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, பெங்களூர் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்த போட்டியில், டாஸ் வென்ற பெங்களூர் அணி, பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி ஆடிய ராஜஸ்தான் அணியில், தொடக்க விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. இருந்த போதும், மிடில் ஆர்டரில் ஷிவம் துபே மற்றும் ராகுல் டெவாட்டியா ஆகியோர், ஓரளவு சிறப்பாக ஆடியதால், ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில், 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது.
இதனைத் தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய பெங்களூர் அணியில், தொடக்க வீரர்களான தேவ்தத் படிக்கல் (Devdutt Padikkal) மற்றும் கோலி (Kohli) ஆகியோர் எந்தவித நெருக்கடியும் இன்றி ஆடி ரன் குவித்தனர். இருவரும், பேட்டிங் துறையை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்த நிலையில், இளம் வீரரான தேவ்தத் படிக்கல் சதமடித்து அசத்தினார்.
கடந்த சீசன் முதல் பெங்களூர் அணிக்காக ஆடி வரும் தேவ்தத் படிக்கல், பல போட்டிகளில் அந்த அணியின் தூணாக இருந்து செயல்பட்டுள்ளார். இந்த சீசனில் இதுவரை, இரண்டு போட்டிகளில் ஆடியுள்ள தேவ்தத் படிக்கல், பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை.
ஆனால், இன்றைய போட்டியில், தனது முதல் ஐபிஎல் சதத்தையும் பதிவு செய்து, அசத்தியுள்ளார். மறுமுனையில், கோலி 72 ரன்களுடன் அவுட்டாகாமல் நின்ற நிலையில், விக்கெட்டுகள் எதையும் இழக்காத பெங்களூர் அணி, 17 ஆவது ஓவரிலேயே இலக்கை எட்டிப் பிடித்து, பட்டையைக் கிளப்பியது. மேலும், ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில், விக்கெட்டுகளை இழக்காமல், எட்டப்பட்ட இரண்டாவது சேஷிங் ஸ்கோராகவும் இது பதிவானது.
இந்த சீசனில், இதுவரை நான்கு போட்டிகளில் ஆடியுள்ள பெங்களூர் அணி, நான்கிலும் வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதுவரை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றாத பெங்களூர் அணி, இந்த முறை பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் அதிக பலத்துடன் காணப்படும் நிலையில், இந்த தடவை கோப்பையைக் கைப்பற்றி, சாதனை படைக்கும் என பெங்களூர் ரசிகர்கள், அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘நம்ம கோலியா இது..!’.. 10-ம் வகுப்பு படித்தபோது கோலியின் பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் அனுப்பிய Circular.. என்ன எழுதியிருக்கு தெரியுமா..? ‘செம’ வைரல்..!
- ‘இதெல்லாம் கரெக்ட்டா அமைஞ்சா, என்னை மறுபடியும் அங்க பார்ப்பீங்க’!.. யாரும் எதிர்பார்க்காத பதில்.. ரசிகர்களுக்கு ‘இன்ப அதிர்ச்சி’ கொடுத்த ஏபிடி..!
- 'என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்றீங்களே மா'!.. ஆரஞ்ச் கேப் எல்லாம் சும்மா... ஆர்சிபி-க்காக ஏபிடி போட்டுவைத்துள்ள 'மெகா ஸ்கெட்ச்'!.. எதிரணிகள் ஷாக்!
- மேக்ஸ்வெல் எல்லா மேட்ச்லையும் 'பட்டைய' கெளப்புறதுக்கு காரணம்... அந்த 'ரெண்டு பேரு' தான்...! 'எத வச்சு அப்படி சொல்றேன்னா...' - வாகனின் கணிப்பு...!
- "ஒண்ணா சேர்ந்து 'சூப்பரா' ஆடிட்டு இருந்தோம்.. திடீர்ன்னு 'மேக்ஸ்வெல்'லுக்கு என் மேல 'கோபம்' வந்துடுச்சு.." போட்டிக்கு நடுவே நடந்தது என்ன??.. மனம் திறந்த 'டிவில்லயர்ஸ்'!!
- 'எத்தனை வருஷத்து பகை தெரியுமா?.. மொத்தமா பழி தீர்த்துட்டாரு'!.. சிராஜ் பவுலிங் குறித்து... கோலி வெளியிட்ட அதிரவைக்கும் சீக்ரெட்!
- VIDEO: ‘மனசுல இருந்த சோகம்’!.. கையெடுத்து கும்பிட்டு கலங்கிய ‘சஹால்’ மனைவி.. வெளியான ‘உருக்கமான’ பின்னணி..!
- 'சார் கலக்கிட்டீங்க'!.. 'இல்ல என்ன மன்னிச்சிடுங்க... நான் பண்ணது பெரிய தப்பு'!.. 'அது இல்ல சார்'... 'அய்யோ ப்ளீஸ்'!.. விரட்டி விரட்டி மன்னிப்பு கேட்கிறாரு!.. என்னவா இருக்கும்?
- ‘சந்தேகமே வேண்டாம்’!.. ‘இனி அவருக்கு ப்ளேயிங் 11-ல இடம் கிடைக்குறது கஷ்டம்தான்’.. இளம்வீரரை கடுமையாக சாடிய முன்னாள் வீரர்கள்..!
- சென்னை பிட்ச்ச சென்னை வாசிகளவிட... கோலி நல்லா தெரிஞ்சுவச்சிருக்காரு!.. பிட்ச்சை வைத்து மேட்ச்சை மாற்றிய கோலியின் ராஜதந்திரம்!.. ஆர்சிபி ஜெயிச்சது 'இப்படி' தான்!