RCB அணிக்கு தொடரும் சோகம்.. ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய பிரபல வீரர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் வீரரான ராஜத் படிதார் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து காயம் காரணமாக விலகியுள்ளார். இதனை அந்த அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இதனால் அந்த அணி ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது ஐபிஎல் தொடர். கடந்த வருடத்திலிருந்து பத்து அணிகள் இந்த தொடரில் பங்கேற்று வருகின்றன. அதன்படி சில தினங்களுக்கு முன்னர் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் அட்டவணை வெளியிடப்பட்டது. மார்ச் 31ஆம் தேதி துவங்கிய ஐபிஎல் போட்டிகள் டிசம்பர் 28 ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெற இருக்கின்றன.
இந்நிலையில் ஐபிஎல் தொடரின் முக்கிய வீரர்கள் சிலர் காயம் காரணமாக இந்த ஆண்டு தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியின் பும்ரா இந்த வருடம் ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என தெரிகிறது. சமீபத்தில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் ஓய்வில் இருந்துவருவது குறிப்பிடத்தக்கது. மற்றொரு மும்பை வீரரான ரிச்சர்ட்சன் கிளப் கிரிக்கெட் போட்டியின் போது காயமடைந்த நிலையில் அவரும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
அதேபோல, டெல்லி அணியின் ரிஷப் பண்ட் இந்த ஐபிஎல் தொடரை பங்கேற்க மாட்டார் என அந்த அணி அறிவித்திருந்தது. விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் பண்டுக்கு பதிலாக டெல்லி அணியை வார்னர் வழிநடத்தி வருகிறார். இப்படி முக்கிய வீரர்கள் காயம் காரணமாக வெளியேறிவரும் நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ராஜத் படிதார் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விளக்கியுள்ளதாக அந்த அணி தெரிவித்துள்ளது.
குதிகால் காயம் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த அவர் விரைவில் அணியில் இணைவார் என முன்னர் தகவல்கள் வெளியாகின. தற்போது அவர் இந்த வருட ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அந்த அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. அவருக்கு பதில் மாற்று வீரர் யார் என்பது குறித்து அந்த அணி இன்னும் அறிவிக்கவில்லை. இது தொடர்பாக அந்த அணி வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில்,"துரதிருஷ்டவசமாக, அகில்லெஸ் ஹீல் காயம் காரணமாக PL2023ல் இருந்து ரஜத் படிதார் வெளியேறியுள்ளார். ரஜத் விரைவில் குணமடைய விரும்புகிறோம். மேலும் அவருக்கு தொடர்ந்து ஆதரவளிப்போம். ரஜத்துக்கு மாற்று வீரர் குறித்து அறிவிப்பை வெளியிட வேண்டாம் என்று பயிற்சியாளர்களும் நிர்வாகமும் முடிவு செய்துள்ளனர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "கவலையோட இந்தியாவை விட்டு கிளம்புறேன்".. IPL தொடரில் இருந்து விலகிய வில்லியம்சன்.. வீடியோ..!
- "எழுதி வச்சுக்கோங்க.. CSK க்கு அடுத்த கேப்டன் அவரு தான்".. ஆருடம் சொன்ன வீரேந்திர சேவாக்..!
- "ஈசாலா கப் நஹி".. டுபிளேஸிஸ் சொன்னதை கேட்டு திகைச்சுப்போன ரசிகர்கள்.. விராட் கோலி ரியாக்ஷன் தான்😂.. வீடியோ..!
- ஹைதராபாத் - ராஜஸ்தான் போட்டியில் கருப்பு நிற Band உடன் களமிறங்கிய வீரர்கள்.. சோகத்தில் கிரிக்கெட் உலகம்..!
- 2011 வேர்ல்ட் கப் Winning சிக்ஸரை அப்படியே ரீ கிரியேட் செஞ்ச தோனி.. தீயாய் பரவும் வீடியோ..!
- ரிசப் பண்ட்-காக டெல்லி அணி செய்த செயல்.. ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!
- கிரிக்கெட் ரசிகர்களுக்கு செம்ம செய்தி.. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் சூப்பர் அறிவிப்பு!
- வெயிட் ஈஸ் ஓவர்.. போடு விசில.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பகிர்ந்த மாஸ் வீடியோ..!
- காயத்தால் வெளியேறிய முகேஷ் சவுத்ரி.. CSK குடும்பத்தில் இணைந்த இளம் வீரர்.. யாருப்பா இந்த ஆகாஷ் சிங்..?!
- 10 வகுப்பு மார்க் ஷீட்டை பகிர்ந்த கிங் கோலி.. அந்த கேப்ஷன் தான் செம்ம.. வைரலாகும் போஸ்ட்..!