‘போட்டி போட்டுல்ல பண்ணிருக்காங்க’.. ஐபிஎல் தொடரில் மோசமான சாதனை படைத்த RCB-PBKS.. என்ன தெரியுமா?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டியில் மோசமான சாதனை பதிவாகியுள்ளது.

Advertising
>
Advertising

ஐபிஎல் தொடரின் 3-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 2 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் டு பிளசிஸ் 88 ரன்களும், விராட் கோலி 41 ரன்களும், தினேஷ் கார்த்திக் 32 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. இந்த இலக்கை பஞ்சாப் அணி அடிப்பது கடினம் என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர். ஆனால் ஆரம்பம் முதலே பஞ்சாப் வீரர்கள் அதிரடி காட்ட ஆரம்பித்தனர். அதனால் 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 208 ரன்களை பஞ்சாப் அணி எடுத்தது. அதனால் 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தி பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இப்போட்டியில் இரு அணிகளும் சேர்ந்து வித்தியாசமான சாதனை ஒன்றை படைத்துள்ளன. முதல் இன்னிங்சில் பஞ்சாப் அணி 23 எக்ஸ்ட்ரா ரன்களை ஒயிட் மற்றும் நோ பால் மூலம் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து பெங்களூரு அணியும் 22 எக்ஸ்ட்ரா ரன்களை வாரி வழங்கிது. அதனால் ஒரே போட்டியில் 45 எக்ஸ்ட்ரா ரன்கள் பதிவாகியுள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு ஐபிஎல் போட்டி தொடங்கப்பட்ட காலத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் டெக்கான் சார்ஜர்ஸ் அணியும் இணைந்து 38 எக்ஸ்ட்ரா ரன்களை பதிவு செய்தன. இதனைத் தொடர்ந்து 2010-ம் ஆண்டு பஞ்சாப் மற்றும் மும்பை ஆகிய அணிகள் 38 ரன்களை பதிவு செய்தன. தற்போது பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் 45 எக்ஸ்ட்ரா ரன்களை கொடுத்து மோசமான சாதனையை படைத்துள்ளன.

RCB, IPL, RCBVPBKS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்