"'ஐபிஎல்' ஏலம் எல்லாம் 'ஓவர்'... இனி தான் இருக்கு வாணவேடிக்க..." 'ரிஸ்க்'கான முடிவுடன் தயாராகும் 'ஆர்சிபி'??... "ஒரு வேள இருக்குமோ??"
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தாண்டு ஐபிஎல் சீசனுக்கான ஏலம், சென்னையில் வைத்து நேற்று நடைபெற்றது.
இந்த ஏலத்தில் ஆல் ரவுண்டர்கள் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள், எதிர்பார்த்ததை விட அதிக விலைக்கு ஏலம் போனார்கள். அதிகபட்சமாக, ஐபிஎல் வரலாற்றிலேயே கிறிஸ் மோரிஸ் நேற்று 16.25 கோடிக்கு விலைக்கு ராஜஸ்தான் அணி வாங்கிய நிலையில், அதற்கு அடுத்த படியாக, கைலி ஜெமிசனை 15 கோடிக்கு பெங்களூர் அணி வாங்கியது.
இந்த ஏலத்தில், பெங்களூர் அணி, மேக்ஸ்வெல், ஜெமிசன், டேனியல் கிறிஸ்டியன், சச்சின் பேபி, முகமது அசாருதீன் உள்ளிட்ட 8 வீரர்களை வாங்கியது. முன்னதாக, தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பின்ச்சை பெங்களூர் அணி விடுவித்த நிலையில், இந்த முறை தொடக்க ஆட்டக்காரராக கேரள இளம் வீரர் முகமது அசாருதீனை மட்டுமே எடுத்தது.
அசாருதீனைத் தவிர பெங்களூர் அணியில் ஜோஷ் பிலிப், தேவ்தத் படிக்கல் ஆகியோர் மட்டுமே தொடக்க ஆட்டக்காரராக உள்ளனர். இதில், ஜோஷ் பிலிப் அனைத்து ஆட்டங்களிலும் இறங்க வாய்ப்புகள் மிக குறைவு என்கிறார்கள். மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ், கைலி ஜெமிசன், டேனியல் கிறிஸ்டியன் ஆகிய 4 வெளிநாட்டு வீரர்கள் களமிறங்க தான் அதிக வாய்ப்புள்ளது. இதில், ஜெமிசன் அல்லது கிறிஸ்டியன் ஆகிய இருவரில் ஒருவர் சொதப்பும் பட்சத்தில் தான் பிலிப் களமிறங்குவார்.
இதன் காரணமாக, இரண்டு கேரள இளம் வீரர்களான தேவ்தத் படிக்கல் மற்றும் அசாருதீன் ஆகியோர் தொடக்க வீரராக களமிறங்குவார்கள் என தெரிகிறது. கடந்த சீசனில் இளம் வீரர் தேவ்தத் சிறப்பாக ஆடியிருந்தார். அதே போல, மற்றொரு இளம் வீரரான அசாருதீன், சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் அதிரடியாக ஆடி அசத்தியிருந்தார்.
கடந்த சீசனில் தேவ்தத்தை களமிறக்கி, பெங்களூர் அணி ஷாக் கொடுத்தது போல, இந்த முறை இரண்டு இளம் வீரர்களை இறக்கி ஷாக் கொடுக்க பெங்களூர் அணி திட்டம் போட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. அதிக அனுபவமில்லாத இளம் வீரர்களை தொடக்க வீரர்களாக களமிறக்குவது ஒரு துணிச்சலான முடிவாகும். அப்படி ஒரு முடிவை எடுத்து, பெங்களூர் அணி இந்த முறை ஐபிஎல் சீசனில் அதிக கவனம் பெறும் என்கிறார்கள்.
அது மட்டுமில்லாமல், பெங்களூர் கேப்டன் கோலி கூட சில போட்டிகளில் தொடக்க வீரராக ஆடியுள்ளார். இப்படி பல யூகங்கள் உள்ள நிலையில், ஜோஷ் பிலிப்பையே அனைத்து போட்டிகளிலும் தொடக்க வீரராக களமிறக்குமா அல்லது இளம் வீரர்களுடன் பெங்களூர் அணி ஷாக் கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "எத்தனை சோதனை வந்தாலும்... அது எல்லாத்தையும் தாண்டி வருவோம்'ல..." இனி இருக்கு என்னோட ஆட்டம்... இரண்டாவது ரவுண்டில் கிடைத்த 'சான்ஸ்'!!
- ஏலத்தில் ‘சச்சின் பேபி’-யை எடுத்த ஆர்சிபி.. ரசிகர் ஒருவர் கேட்ட ‘கேள்வி’.. மொத்தமாக குழம்பிப் போன ரசிகர்கள்..!
- மேக்ஸ்வெல்லை வாங்க போட்டி போட்ட 'சிஎஸ்கே', 'ஆர்சிபி'... இறுதியில் 'பெருந்தொகை' கொடுத்து வாங்கிய 'அணி'!!
- "அவர எப்டியாச்சும் 'டீம்'ல எடுங்க..." 'ஐபிஎல்' ஏலம் ஸ்டார்ட் ஆகும் முன்னரே... 'டிரெண்ட்' ஆகும் 'இளம்' வீரர்... "இன்னைக்கி அப்போ 'சம்பவம்' இருக்கு?!!"
- "இத்தன நாள் பட்ட கஷ்டம் 'வீண்' போகல... சர்வதேச போட்டியில் கால் பதிக்கவுள்ள 'இந்திய' வீரர்??... 'லேட்டஸ்ட்' தகவலால் 'உச்சகட்ட' எதிர்பார்ப்பில் 'ரசிகர்கள்'!!
- "அவரோட 'கேப்டன்சி'ல ஆடுறது தான் ஆச... அந்த 'ஐபிஎல்' டீம் தான் என்னோட 'டார்கெட்'..." மனம் திறந்த 'மேக்ஸ்வெல்'... 'இது வேற லெவல் 'Combo' ஆச்சே'!!
- "என்னய்யா, 'மேட்ச்' நடுவுல தமிழ் எல்லாம் பேசுறீங்க??..." மைக்கில் பதிவான 'ஆடியோ'... பேசுனது 'அஸ்வின்' இல்ல.. அது யாருங்கிறது தான் 'ஹைலைட்டே'... வைரல் 'வீடியோ'!!
- "அட, 'கேப்டன்' நம்ம 'பாஷை' பேசுறாரு பாருங்க..." ஆர்ப்பரித்த 'சென்னை' ரசிகர்கள்... வேற லெவலில் வைரலாகும் 'வீடியோ'!!!
- "என்கிட்ட இந்த 'வேலை'ய வெச்சுக்காதீங்க... வாய்ப்பேயில்ல 'ராஜா'..." கறாராக சொன்ன 'ரஹானே'... 'அதிரடி' கருத்து!!
- "இந்த உலகமே என்னை எதிர்த்தாலும்... நான் 'திரும்ப' வருவேன்..." 'தல' வசனத்துடன் கிரிக்கெட் 'வீரர்' போட்ட 'வீடியோ'... வேற லெவலில் 'வைரல்'!!!