“இனி கோலி கூட பேட்டிங் செய்ய முடியாது”.. டிரெஸ்ஸிங் ரூமில் கிண்டல் செய்த மேக்ஸ்வெல்.. ஓ இதுதான் காரணமா..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இனி விராட் கோலியுடன் பேட் செய்ய மாட்டேன் என மேக்ஸ்வெல் நகைச்சுவையாக கூறிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

“இனி கோலி கூட பேட்டிங் செய்ய முடியாது”.. டிரெஸ்ஸிங் ரூமில் கிண்டல் செய்த மேக்ஸ்வெல்.. ஓ இதுதான் காரணமா..?
Advertising
>
Advertising

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 49-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 173 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் சிஎஸ்கே அணி விளையாடியது. ஆனால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 160 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் 13 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில், பெங்களூரு அணி முதல் விக்கெட்டுக்கு 62 ரன்கள் எடுத்திருந்த போது கேப்டன் டு பிளசிஸ் 38 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன் பின்னர் களமிறங்கிய மேக்ஸ்வெல் தேவையில்லாமல் ஒரு ரன்னுக்கு ஓடி ரன்-அவுட் ஆனார். ஜடேஜா வீசிய ஓவரில் விராட் கோலி ஷார்ட் கவரில் பந்தை தட்டிவிட்டு ரன் ஓட முயற்சி செய்தார். ஆனால் அதற்குள் ராபின் உத்தப்பா அந்த பந்தை விக்கெட் கீப்பர் தோனியிடம் வீசினார். அதனால் மேக்ஸ்வெல் 3 ரன்னில் ரன் அவுட்டாகி தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

RCB Maxwell teases Virat Kohli over his run-out against CSK

இந்த நிலையில் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் பெற்ற வெற்றியை டிரஸ்ஸிங் ரூமில் பெங்களூரு அணி கொண்டாடினர். அப்போது, விராட் கோலி டிரஸ்ஸிங் அறையில் மேக்ஸ்வெல்லை வரவேற்றபோது, அவரை ‘மிகப்பெரிய காயம்பட்ட வீரர்’ என்று கிண்டல் செய்தார்.

இதனை அடுத்து தனது ரன் அவுட்டை நினைவுகூர்ந்த மேக்ஸ்வெல், ‘இனி உங்களுடன் (விராட் கோலி) என்னால் பேட் செய்ய முடியாது. நீங்கள் மிக வேகமாக ஓடுகிறீர்கள். உங்களுக்கு ஒன்றிரண்டு ரன்கள் கிடைக்க நானா கிடைத்தேன்?’ என நகைச்சுவையாக கூறினார். இந்த வீடியோவை பெங்களூரு அணி தங்களது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்: http://www.behindwoods.com/bgm8/

RCB, CSK, IPL, VIRATKOHLI, MAXWELL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்