போன வருசம் பஞ்சாப் டீம்ல ஆடுன மேக்ஸ்வெல் இவர் தானா..? பிரீத்தி ஜிந்தாவே ‘செம’ ஷாக் ஆகியிருப்பாங்க.. தெறிக்கும் மீம்ஸ்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் மேக்ஸ்வெல்லின் ஆட்டம் குறித்து ரசிகர்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஐபிஎல் (IPL) தொடரின் 48-வது லீக் போட்டி இன்று (03.10.2021) ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் விராட் கோலி (Virat Kohli) தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியும், கே.எல்.ராகுல் (KL Rahul) தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.

அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் விராட் கோலியும், தேவ்தத் படிக்கலும் களமிறங்கினர். இதில் 25 ரன்கள் எடுத்திருந்தபோது ஹென்ரிக்ஸ் ஓவரில் போல்டாகி விராட் கோலி வெளியேறினார். இதனை அடுத்து தேவ்தத் படிக்கலும் (40 ரன்கள்) ஹென்ரிக்ஸ் ஓவரில் விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

இந்த சமயத்தில் க்ளென் மேக்ஸ்வெல் (Glenn Maxwell) மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் (AB de Villiers) ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்தனர். இந்த கூட்டணி பஞ்சாப் அணியை பந்துவீச்சை நாலாபுறமும் பந்தாடியது. இதில் 23 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட்டாகி ஏபி டிவில்லியர்ஸ் வெளியேறினார். ஆனால் மேக்ஸ்வெல் 33 பந்துகளில் 57 ரன்கள் அடித்து அசத்தினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களை பெங்களூரு அணி எடுத்தது.

இந்த நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். அதற்கு காரணம், கடந்த 2020-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் சார்பாக மேக்ஸ்வெல் விளையாடினார். ஆனால் அந்த தொடரில் அவர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக ஒரு சிக்சர் கூட அடிக்கவில்லை. அதனால் பல போட்டிகளில் அவருக்கு விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

ஆனால் இன்றைய போட்டியில் அதே பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் சார்பாக மேக்ஸ்வெல் விளையாடி வருகிறார். இப்போட்டியில் 4 சிக்சர், 3 பவுண்டரிகள் விளாசி அரைசதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்