மொத்த டீமும் ‘சோகத்துல’ இருக்கு.. அங்க ‘ஒருத்தர்’ மட்டும் என்ன பண்ணிட்டு இருக்காரு பாருங்க.. யாருப்பா அந்த ப்ளேயர்..? வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மொத்த டீமும் ‘சோகத்துல’ இருக்கு.. அங்க ‘ஒருத்தர்’ மட்டும் என்ன பண்ணிட்டு இருக்காரு பாருங்க.. யாருப்பா அந்த ப்ளேயர்..? வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!

ஐபிஎல் (IPL) தொடரின் 31-வது லீக் போட்டி நேற்று அபு தாபி மைதானத்தில் நடைபெற்றது. இதில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் (RCB), இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் (KKR) மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

RCB Kyle Jamieson smiling pic in the dugout goes viral

அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் விராட் கோலியும், தேவ்தத் படிக்கலும் களமிறங்கினர். ஆனால் ஆரம்பமே பெங்களூரு அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கொல்கத்தா வீரர் பிரஷித் கிருஷ்ணா வீசிய 2-வது ஓவரில் விராட் கோலி அவுட்டாகி வெளியேறினார். இதனை அடுத்து தேவ்தத் படிக்கலும் (22 ரன்கள்) லோக்கி பெர்குசனில் ஓவரில் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

RCB Kyle Jamieson smiling pic in the dugout goes viral

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இளம் வீரர் ஸ்ரீகர் பரத் 16 ரன்களில் வெளியேற, அடுத்து வந்த அதிரடி ஆட்டக்காரர் ஏபி டிவில்லியர்ஸ் (AB de Villiers) டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இதனை அடுத்து பெங்களூரு அணியின் நம்பிக்கை நட்சத்திரமான க்ளென் மேக்ஸ்வெல்லும் (Glenn Maxwell) 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, 19 ஓவர்கள் முடிவில் 92 ரன்களுக்கு பெங்களூரு அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனை அடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 10 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் அடித்தது. அதனால் 9 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தி கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக சுப்மன் கில் (Shubman Gill) 48 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் (Venkatesh Iyer) 41 ரன்களும் எடுத்தனர்.

இந்த நிலையில் பெங்களூரு அணியில் விளையாடி வரும் நியூஸிலாந்து வீரர் கைல் ஜேமிசனின் (Kyle Jamieson) போட்டோ இணையத்தில் பரவி வருகிறது. இப்போட்டியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பரிதாப நிலையில் பெங்களூரு அணி இழந்தது. 8 ஓவர்கள் முடிவில் 51 ரன்கள் மட்டுமே எடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை அந்த அணி இழந்திருந்தது.

இந்த இக்கட்டான சமயத்தில் பெங்களூரு அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஏபி டிவில்லியர்ஸ் களமிறங்கினார். இவர் அணியை சரிவில் இருந்து மீட்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆண்ட்ரே ரசல் (Andre Russell) வீசிய 9-வது ஓவரில், தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே போல்டாகி வெளியேறினார்.

இது டக்அவுட்டில் (Dugout) அமர்ந்திருந்த பெங்களூரு வீரர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது கைல் ஜேமிசன் மட்டும் பெங்களூரு அணியின் மசாஜ் தெரபிஸ்ட் நவனிதா கௌதமிடம் (Navnita Gautam) சிரித்து பேசிக்கொண்டு இருந்தார்.

இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. தற்போது நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ் மூலம் கைல் ஜேமிசனை வறுத்தெடுத்து வருகின்றனர். இப்போட்டியில் 12 பந்துகளில் 4 ரன்கள் எடுத்து கைல் ஜேமிசன் அவுட்டானது குறிப்பிடத்தக்கது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்