பவுண்டரி, சிக்ஸர்ன்னு பொளந்த தோனி.. உடனடியாக 'RCB' ரசிகர்கள் செய்த காரியம்.. இளம் 'CSK' வீரர் பகிர்ந்த சுவாரஸ்யம்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

15 ஆவது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதி இருந்தது.

Advertising
>
Advertising

இந்த போட்டியில் தோல்வி அடைந்த சென்னை அணி, தங்களின் இரண்டாவது போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை இன்று (31.03.2022) சந்தித்து வருகிறது.

இதில், டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி, பந்து வீச்சைத் தேர்வு செய்துள்ளது.

ஏலத்தில் பட்டையை கிளப்பிய சிஎஸ்கே

முன்னதாக, ஐபிஎல் மெகா ஏலத்தின் போது, ஏற்கனவே சிஎஸ்கே அணியில் ஆடிய பிராவோ, உத்தப்பா, ராயுடு உள்ளிட்ட வீரர்களை சென்னை அணி எடுத்திருந்தாலும், சில அசத்தல் இளம் வீரர்கள் மற்றும் அனுபவ வீரர்கள் சிலரையும் அவர்கள் தட்டித் தூக்கி இருந்தனர். ஆடம் மில்னே, கான்வே, ராஜ்வர்தன், ஷிவம் துபே உள்ளிட்டோரும் மெகா ஏலத்தில், சென்னை அணியினரின் தேர்வாக இருந்தது.

ஷிவம் துபே

இதில், ஷிவம் துபேவை சென்னை அணி எடுத்த அதே நாளில், அவருக்கு குழந்தையும் பிறந்திருந்தது. ஒரே நாளில், டபுள் சந்தோஷத்தால், ஆனந்தத்தின் உச்சத்திற்கே சென்றிருந்தார் ஷிவம் துபே. கடந்த சீசனில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த ஷிவம் துபே, அதற்கு முன்பு பெங்களூர் அணியிலும் ஐபிஎல் போட்டிகளில் ஆடியுள்ளார்.

அதே போல, இந்திய அணிக்காக டி 20 போட்டிகளிலும் துபே ஆடியுள்ளார். ஐபிஎல் போட்டிகளில், பல அணிகளில் அவர் ஆடி இருந்தாலும், சிஎஸ்கே அணி தேர்வு செய்ததும் திக்குமுக்காடி போனார் அவர். இதற்கு காரணம், அவர் தோனியின் தீவிர ரசிகன் என்பது தான். அவரது அணியில் வாய்ப்பு கிடைத்ததும், கடும் உற்சாகம் அடைந்துள்ளார் ஷிவம் துபே.

ஆர்சிபி ரசிகர்கள் கொடுத்த ரியாக்ஷன்

இந்நிலையில், தோனி மற்றும் சிஎஸ்கே குறித்த தன்னுடைய அசத்தல் தருணம் ஒன்றை ஷிவம் துபே தற்போது பகிர்ந்துள்ளார். "நான் பெங்களூர் அணிக்காக கடந்த 2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆடி இருந்தேன். அப்போது, எங்களுக்கு எதிராக சிஎஸ்கே ஆடி இருந்தது. நான் அந்த போட்டியில் ஆடவில்லை. வெளியே தான் இருந்தேன். அப்போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அதிகம் பேர், ஆர்சிபி ஜெர்சியை அணிந்திருந்ததை நான் பார்த்தேன்.

அந்த சமயத்தில், இலக்கை நோக்கி ஆடிய சிஎஸ்கே அணிக்கு 4 முதல் 5 விக்கெட்டுகள் வரை அடுத்தடுத்து சென்று விட்டது. இதற்கு பின்னர் வந்த தோனி, சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகளை பறக்க விட, இதனைக் கண்ட ரசிகர்கள், தங்களின் ஆர்சிபி ஜெர்சியை மாற்றி, சிஎஸ்கே ஜெர்சியை அணிந்து கொண்டனர்" என தெரிவித்துள்ளார். சிஎஸ்கே அணி ரசிகர்களைத் தவிர, தோனியின் பேட்டிங்கிற்காக சிஎஸ்கே போட்டியைக் காணும் மற்ற அணியின் ரசிகர்களும் அதிகம் பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் போட்டியில் வாய்ப்பு

கொல்கத்தா அணிக்கு எதிரான முதல் போட்டியில், ஷிவம் துபேவிற்கு வாய்ப்பு கிடைத்திருந்தது. ஆல் ரவுண்டரான அவர், 3 ரன்களில் ஆட்டமிழந்திருந்தார். மேலும், ஒரு ஓவர் மட்டுமே பந்து வீசிய அவர், விக்கெட் எதுவும் எடுக்காமல், 11 ரன்கள் கொடுத்திருந்தார்.

லக்னோ அணிக்கு எதிரான இன்றைய போட்டியிலும் ஷிவம் துபே அணியில் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

MSDHONI, CHENNAI-SUPER-KINGS, SHIVAM DUBE, RCB, CSK, IPL 2022, எம்.எஸ். தோனி, ஷிவம் துபே

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்